டில்லி : இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது (ஜிடிபி) 7.2 சதவீதத்திலிருந்து சரிந்து 6.6 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.
இந்தியாவின் பொருளாதாரம் குறித்த முக்கிய அம்சங்களை ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று (டிசம்பர் 06) வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பில், 2024-2025ம் நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதத்தில் இருந்து 6.8 சதவீதம் குறையும். அதே சமயம் நான்காவது காலாண்டில் 7.4 சதவீதத்தில் இருந்து 7.2 சதவீதமாக வளர்ச்சி பெறும். தற்போதைய காலாண்டில் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி சரிவுடன் காணப்பட்டாலும், அடுத்த காலாண்டில் உயர்வடையும் என்ற நம்பிக்கை உள்ளது.

2024ம் ஆண்டின் அக்டோபர் மாதம் நடைபெற்ற பொருளாதார ஆலோசனை கூட்டத்தில் மூன்றாவது காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கபப்பட்டது. நிதி அமைச்சகம் பார்லிமென்டில் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையிலும் இதுவே குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் நாட்டின் பொருளாதாரம் குறைந்து வருவதாக சொல்லப்பட்டுள்ளது.
அதே சமயம் ரெபோ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இன்றி 6.5 சதவீதத்திலேயே இருக்கும் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது. 2023ம் ஆண்டிற்கு பிறகு தொடர்ந்து 11வது முறையாக ரெபோ வட்டி விகிதம் மாற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதிகரித்து வரும் பணவீக்கம், சரிந்து வரும் பொருளாதார நிலை ஆகியவற்றின் காரணமாக ரெபோ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்ய வேண்டாம் என இன்று நடைபெற்ற பணக் கொள்கை கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
அதோடு ரெபோ வட்டிவிகிதத்தில் மாற்றம் செய்யப்படாததால் ரியல் எஸ்டேட் துறையில் லாபம் அதிகரிக்கும். இதனால் வீடு, மனை ஆகியவற்றின் விலைகளும் உயருவற்கான வாய்ப்பு கிடையாது என்றும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு முதலீடுகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}