கும்பமேளாவுக்குப் போன இடத்தில்.. அணி ஜெர்சியை ஆற்றில் முக்கி எடுத்த ஆர்.சி.பி. ரசிகர்!

Jan 24, 2025,03:01 PM IST

லக்னோ: மகா கும்பமேளாவில் ஆர்சிபி அணியின் ஜெர்சியை (சீருடையை) ரசிகர் ஒருவர் மூன்று முறை நீரில் நனைத்தெடுக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில்,  இந்த முறையாவது பெங்களூரு அணி ஜெயிக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்தியன் பிரீமியர் லீக்கின் மிகவும் பிரபலமான அணிகளில் ஒன்றாகும். வீராட் கோலி உள்பட பல சூப்பர் ஸ்டார்கள் அந்த அணியில் உள்ளனர். அதிரடியான அணியும் கூட. கடந்த 17 வருடங்களாக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறது. கடந்த 2009, 2011 மற்றும் 2016 இல்  சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டி வரைக்கும் முன்னேறியது ஆர்சிபி அணி. ஆனாலும் வெற்றியை நிலை நாட்ட முடியாமல் தோல்வியை தழுவியது. 




17 வருடங்களாக, ஒவ்வொரு முறையும் ஆர்சிபி அணி சிறப்பாக விளையாடினாலும் ரன்கள் சேகரித்தாலும் என்னவோ தெரியவில்லை இதுவரை ஒரு தடவை கூட கோப்பையை கைப்பற்றியதே இல்லை. ஐபிஎல் பிரீமியர் லீக்கின் வரலாற்றில் சாதனை படைத்த வீரர்கள் இந்த அணியில் இடம் பெற்றிருப்பதால் பெங்களூர் அணி வலுவான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளது. இதனால் ஒவ்வொரு முறையும் ஆர்சிபி ரசிகர்கள் இந்த முறையாவது நமக்குக் கப் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது வாடிக்கையாகி விட்டது. ஆனாலும் இது வரை கிடைத்தபாடில்லை. இது எல்லோருக்குமே ஆச்சரியம்தான், வருத்தம்தான்.


ஒவ்வொரு முறையும் எதிர்பார்ப்புடன் இருக்கும் ரசிகர்களில் மத்தியில் களமிறங்கும்  ஆர் சி பி ஒவ்வொரு முறையும் தோல்வியை சந்தித்து வருவது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை அதிகரித்தது. இதனால் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் ஆர் சி பி அணி நல்லா விளையாடுறீங்க. ஆனா கப்பு மட்டும் ஜெயிக்க மாட்டேங்கிறீங்க என தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்தனர். இதை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்களும் உள்ளன.


ஆர்சிபி அணியில் சிறந்த பேட்ஸ்மேன்கள் இருந்தாலும் சரியான பவுலர்கள் இல்லாத காரணத்தால் தான் தொடர் சரிவை சந்தித்து வருகிறது என பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து  வந்தனர். இதனை கருத்தில் கொண்டுதான் கடந்த நவம்பர் 24 & 25-ஆம் தேதிகளில் சவுதி அரேபியா  ஜெட்டாநகரில் நடைபெற்ற ஐபிஎல் 18ஆவது சீசன் மெகா ஏலத்தில் பவுலர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து முக்கியமான பவுலர்களை ஏலத்தில் எடுத்தனர்.


ஆர்சிபி அணியில் தற்போது  விராட் கோலி உள்பட பல முக்கியமான வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதனால் ஆர் சி பி அணி இந்த முறை ஐபிஎல் தொடரை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத ஆர்சிபி இந்த முறையாவது வெல்ல வேண்டும் என்ற நோக்கில் உத்தரபிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்வில் ஆர் சி பி அணியின் ஜெர்சியை மூன்று முறை ரசிகர் ஒருவர் நீரில் நனைத்தெடுத்தார் (அதாவது புனித நீராடுதல் போல‌. ரசிகரின் இந்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன் 

ஆர் சி பி வரும் ஐபிஎல் தொடரை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


இதுக்காகவாவது இந்த முறை கப்பை அடிச்சுடுங்கப்பா.. அந்த ரசிகர் மனசு சந்தோஷப்படும்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

news

சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

news

A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!

news

மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!

news

True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?

அதிகம் பார்க்கும் செய்திகள்