வைகையில் நீர்திறப்பு.. மதுரையில் வெள்ள பெருக்கு.. கோரிப்பாளையத்தில் போக்குவரத்து நிறுத்தம்!

Dec 19, 2023,10:56 AM IST

மதுரை: வைகை அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டதால், மதுரை வைகையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதையடுத்து கோரிப்பாளையத்தில்  தரைப் பாலம் தண்ணீரில் மூழ்கியதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், குமரி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி  காரணமாக தென் மாவட்டங்களில் அதீத கன மழை கொட்டி தீர்த்தது. தற்போது அந்த சுழற்சியானது விலகி விட்டது. அரபிக் கடலுக்குள் போய் விட்டது.


இருப்பினும் தேனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த கனமழையினால், வைகை ஆணையில் நீர்வரத்து  அதிகரித்தது. அணை முழு கொள்ளளவை எட்ட உள்ள நிலையில், மதகுகள் வழியாக தற்போது 3000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.




வைகை அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டதால்  மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை  மாவட்டங்களுக்கு 3வது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வைகை கரையோரம் உள்ள மக்கள் யாரும் ஆற்றில் இறங்கக்கூடாது என்றும், பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. வைகை ஆற்றின் இருகரைகளையும் தொட்டபடி தற்பொழுது வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.


மதுரை வைகை ஆற்றில் வெள்ள பெருக்கெடுத்துச் செல்வதால் கோரிப்பாளையத்தில் உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் போக்குவரத்து அந்தப் பகுதியில் ஸ்தம்பித்துள்ளது. ஆரப்பாளையத்தில் இருந்து தெப்பக்குளம் விரகனூர் வரை நகருக்குள் நுழையாமல் வைகை கரையோரம் செல்லும் வகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. செல்லூர்- ஆழ்வார்புரத்திற்கும் இடையே பேச்சி அம்மன் படித்துறை பகுதியில் இருந்து ஓபுலா படித்துறை பாலம் செல்வதற்கு இரண்டு கரை ரோட்டிலும் ஆற்றுத்தண்ணீர் 2 அடி உயரத்தில் பாய்ந்து செல்கிறது. 


ஆற்றை ஒட்டி ரோடு தரை மட்டமாக இருந்ததால் வெள்ளம் பாய்ந்து ஓடும்போது கரை ரோடுகளில் ஆறாக மாறிவிட்டது.  இதனால் பேச்சியம்மன் படித்துறையில் இருந்து தெப்பக்குளம் வரை வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மீனாட்சி அரசு கல்லூரி வழியாக செல்லும் வைகை ஆற்றுக்கரை ரோட்டில் வெள்ளம் சூழ்ந்ததால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 

காலை நேரம் என்பதால் பள்ளி,கல்லூரி, அலுவலகம் செல்பவர்கள் அதிகம் செல்லும் பாதை அது என்பதால், தற்பொழுது போக்குவரத்து அந்த பகுதிகளில் ஸ்தம்பித்துள்ளது. இதனால் மக்கள் செய்வது அறியாமல் தவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்