சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் நிலைக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை தீவிர புயலாக வலுப்பெற உள்ள நிலையில், நாளை புயல் கரையை கடக்கும்போது தமிழ்நாட்டில் வெயில் அதிகரிக்கும். அதே நேரத்தில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை தீவிர புயலாக வலுப்பெற கூடும். இந்த புயலுக்கு ரெமல் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த ரெமல் புயல் நாளை நள்ளிரவில் வடகிழக்கு நோக்கி நகர்ந்து வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டி உள்ள மேற்குவங்க கடற்கரையில் சாகர் தீவு கோபுபாரா இடையே தீவிரப் புயலாகவே கரையை கடக்கும். அப்போது மணிக்கு 110 முதல் 120 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும்.

இந்த நிலையில் ரெமல் புயல் கரையை கடக்கும் போது தமிழ்நாட்டில் மழை குறைந்து வெப்பம் அதிகரிக்க தொடங்கும். அதே சமயம் தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் தமிழகத்தில் இன்று முதல் ஐந்து தினங்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் 15 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து செல்கிறதாம்.
இதனால் தெற்கு வங்க கடல், மத்திய வங்க கடல், வடக்கு வங்கக்கடல், அந்தமான் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இப்பகுதிகளில் மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனே கரைக்கு திரும்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}