டெல்லி: டெல்லியில் குடியரசு தின விழா கோலாகலமாக நடந்தேறியது. கர்தவ்யா பாதையில் நடந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதையடுத்து கண்கவர் அணிவகுப்பு நடந்தது.
நாட்டின் 76வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. தலைநகர் டெல்லியில் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம். கர்தவ்யா பாதையில் இந்த அணிவகுப்பு நடைபெற்றது. இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக இந்தோனேசிய அதிபர் பிரபோவா சுபியாந்தா கலந்து கொண்டார்.

காலை பத்தரை மணிக்கு கர்தவ்யா பாதையில் அணிவகுப்பு தொடங்கியது. இதில் கிட்டத்தட்ட 10,000 பேர் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர். பல்வேறு மாநிலங்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த 31 அலங்கார ரதங்கள் அணிவகுப்பில் கலந்து கொண்டன. இந்த வருடம் ஸ்வர்னிம் பாரத் - விராசத் ஆர் விகாஸ் என்ற கருப்பொருளில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
இந்த ஆண்டு குடியரசு தின விழா அணிவகுப்பில் முப்படையினரின் கூட்டு அலங்கார ரதம் அணிவகுப்பில் கலந்து கொண்டது. இதற்கு முன்பு வரை தனித் தனியாகவே அலங்கார வாகனங்கள் வரும். இந்த முறை கூட்டுப் படையினரின் அலங்கார வாகனம் பங்கேற்றது. கிட்டத்தட்ட 5000க்கும் மேற்பட்ட கலைஞர்களும் இந்த முறை பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தியபடி அணிவகுப்பில் பங்கேற்றனர்.

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி தேசிய போர் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் அவர் குடியரசு தின விழா நடைபெறும் இடத்திற்கு வந்து சேர்ந்தார். அவரைத் தொடர்ந்து துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தங்கர் வருகை தந்தார். அவருக்குப் பிறகு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, சிறப்பு விருந்தினர் இந்தோனேசிய அதிபர் சுபியாந்தோவுடன் விழா நடைபெறும் இடத்திற்கு வருகை தந்தார். இதையடுத்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அதன் பின்னர் குடியரசு தின விழா அணிவகுப்பு நிகழ்ச்சிகள் தொடங்கின.
இன்றைய அணிவகுப்பில் முக்கிய அம்சமாக இந்தோனேசிய நாட்டு ராணுவத்தினரும் பங்கேற்றனர். 152 பேர் கொண்ட இந்தோனேசிய ராணுவப் படையினர் அணிவகுத்து வருகை தந்தனர். அதேபோல இந்தோனேசிய ராணுவத்தின் 190 பேர் கொண்ட இசைக் குழுவும் கலந்து கொண்டது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}