வாஜிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரான முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்காவின் 47வது அதிபராக டிரம்ப் தேர்வாகியுள்ளார். 2வது முறையாக அதிபர் பதவியை வகிக்கவுள்ளார் டிரம்ப்.
அனைத்து நாட்டினர்களும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வாக்குகள் எண்ணும் பணியும் தொடங்கி நடைபெற்று வந்தது. 2024ம் ஆண்டிற்கான அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபருமான டிரம்ப்க்கும், ஜனநாயகக்கட்சி வேட்பாளரான தற்போதைய துணை அதிபரும், இந்தியா வம்சாவலியைச் சேர்ந்த கமலா ஹாரிசுக்கும் இடையே தான் போட்டி நிலவி வந்தது.
இவர்கள் இருவரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பது போல் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்து வந்தனர். அமெரிக்காவில் மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் 538 எலக்டோரல் காலேஜ் வாக்குகள் உள்ளன. இதில் 270 வாக்குகளுக்கு மேல் வெற்றி பெறும் வேட்பாளரே அதிபராக பொறுப்பேற்பார் என்பது விதி. தேர்தலுக்கு முன்னரே டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ்சுக்கும் இடையே உள்ள போட்டி குறித்தும், யார் பெற்றி பெறுவார்கள் என்றும் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
இந்த கருத்து கணிப்பில்,கமலா ஹாரிசுக்கு 48 சதவீதம் மக்கள் ஆதரவாகவும், டிரம்ப்க்கு 44 சதவீத மக்கள் ஆதரவும் தெரிவித்து இருந்தனர். இந்த கருத்து கணிப்பு முடிவுகள் தேர்தல் முடிவுகள் நெருங்க நெருங்க தலைகீழாக மாறியது. இந்நிலையில், அதிகளவிலான அமெரிக்க மக்களின் வாக்குகளை பெற்று டிரம்ப் வெற்றி பெற்றுள்ளதாக அமெரிக்காவில் உள்ள பிரபல செய்தி தொலைக்காட்சியான ஃபாக்ஸ் நியூஸ் அறிவித்துள்ளது. வெற்றிக்கு தேவையான 270 வாக்குகளை விட அதிகமாக பெற்று அமெரிக்காவின் 47வது அதிபராக டிரம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளது.
இது நம்ப முடியாத வெற்றி - டிரம்ப் மகிழ்ச்சி
டிரம்ப் 4 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அதிபராக தேர்வாகியுள்ளார். அவர் 2வது முறையாக அதிபர் பதவியை வகிக்கவுள்ளார். தனக்குக் கிடைத்துள்ளது அமெரிக்க வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அவளவுக்குக் கிடைத்த மிகப் பரிய வெற்றி என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். இது நம்ப முடியாத வெற்றி என்றும் அவர் சிலாகித்துள்ளார். வலிமையான, வளமையான அமெரிக்காவை உருவாக்கப் போவதாகவும், அமெரிக்காவில் மீண்டும் பொற்காலம் தொடங்கியிருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். தனக்கு 350 எலக்டோரல் வாக்குகள் வரை கிடைக்கும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்..
இந்தத் தேர்தலில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையில் குடியரசுக் கட்சிக்கு பெரும்பான்மை பலம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க துணை அதிபராக ஜேடி வான்ஸ் பதவியேற்கவுள்ளார். இவரது மனைவி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
IMD alert: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு.. அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழக்கும்.. அதி கன மழைக்கு வாய்ப்பு
திருவண்ணாமலை.. தீப மலையின் உச்சியை அடைந்தது தீபம் ஏற்றும் ராட்சத கொப்பரை!
3 மாவட்டங்களில் இன்று அதிகன மழைக்கான ரெட் அலர்ட்.. நாளை தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
Yearender 2024: அஜீத்தால் பிரபலமடைந்த அஜர்பைஜான்.. அதிகம் கூகுள் செய்யப்பட்ட நாடு இதுதான்!
Yearender 2024: நாக்கில் வச்சதும்.. நச்சுன்னு சுவைக்கும் மாங்காய் ஊறுகாய்க்கு.. தேடுதலில் 2வது இடம்!
கார்த்திகை தீபத் திருநாள் ஸ்பெஷல் நைவேத்தியம்...கார்த்திகை பொரி பற்றி இதெல்லாம் தெரியுமா?
ஆங்கில புத்தாண்டு 2025 ராசிபலன் : மேஷம் ராசி வாசகர்களே.. இந்த வருஷம் உங்க வருஷம்.. ஜமாய்ங்க!
திருக்கார்த்திகை தீபத் திருநாள் 2024: எந்த நேரத்தில், எப்படி விளக்கேற்ற வேண்டும்?
Yearender 2024: இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட.. நபர்கள், விளையாட்டுகள்.. இதோ லிஸ்ட்!
{{comments.comment}}