சென்னை: குப்பைத்தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட பெண் குழந்தை அதிர்ஷ்டலட்சுமி பரிதாபமாக இறந்து விட்டது. இந்தக் குழந்தையை தங்கள் குழந்தை என கூறி தத்தெடுத்த காதலர்கள் மீது வழக்கு பாய்ந்துள்ளது.
பூந்தமல்லி ராமானுஜம் கூடல் தெருவில் பெண்கள் விடுதி வளாகத்தில் அருகே ஒரு குப்பைத் தொட்டியில் இருந்து பிறந்து ஒரு சில மணி நேரமேயான பச்சிளம் பெண் குழந்தை தொப்புள் கொடியுடன் கிடந்தது. எறும்புகள் மொய்த்த நிலையில் வலி தாங்காமல் குழந்தை கதறி அழுது சோர்ந்து போயிருந்தது. இதை பார்த்த யுவராணி என்பவர் கணவரை அழைத்து அந்த குழந்தையை குப்பை தொட்டியில் இருந்து மீட்டு பூந்தமல்லி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று முதல் உதவி அளித்துள்ளார்.
அதன் பின்னர் பூந்தமல்லி காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டு இருந்ததனால், பூந்தமல்லி மருத்துவமனையில் இருந்து எழும்பூர் குழந்தைகள் நல மருத்துமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.

பூந்தமல்லி போலீசார் குழந்தையை மீட்கப்பட்ட இடத்திற்குச் சென்று குழந்தை வீசியது யார்? எதற்காக இப்படி செய்தார்கள் என்று ஆய்வு செய்து வந்தனர். மேலும், அருகில் இருக்கும் கண்காணிப்பு கேமரா காட்சிகளும் மூலமாகவும் குற்றவாளிகளை தேடி வருந்தனர். சில வாரங்களுக்கு முன்னர் அந்த பெண்கள் விடுதியில் இருக்கும் பெண்ணும் அவரது காதலரும் வந்து நாங்கள் தான் குழந்தையை அங்கு போட்டு சென்றோம் என்று முன்ஜாமீனுடன் போலீஸ் நிலையம் வந்தனர்.
காதலர்கள் இருவரும் நாங்கள் தான் குழந்தையின் பெற்றோர்கள் என கூறி வந்த நிலையில், அந்த பெண் குழந்தை தற்போது பரிதாபமாக உயிர் இழந்துள்ளது. இதையடுத்து அந்த காதல் ஜோடி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்
ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை
மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்
கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு
சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்
நேபாள பெருவெள்ளம்: 903 பேர் பலி; 4,247 பேர் மாயம்...அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தி.மு.க-வில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்
அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப் பணம்: கன்னியாகுமரி கலெக்டர் அதிரடி உத்தரவு
{{comments.comment}}