டிரோனில் மருந்து அனுப்பி ரிஷிகேஷ் எய்ம்ஸ் சாதனை.. விரைவில் மதுரை எய்ம்ஸிலும் எதிர்பார்க்கலாமா!

Feb 17, 2023,10:13 AM IST
கார்வால்:  உத்தரகாண்ட் மாவட்டத்தில் உள்ள மலைப் பகுதிகளுக்கு டிரோன் மூலம் காசநோய் மருந்துகளை டெலிவரி செய்து  ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.



கிட்டத்தட்ட மலைப் பகுதியில் 40 கிலோமீட்டர் வரை இந்த டிரோன் சென்று மருந்துகளை டெலிவரி செய்துள்ளது. இதற்கு அந்த டிரோன் எடுத்துக் கொண்ட நேரம் வெறும் அரை மணி நேரம்தான். இதுவே சாலை மார்க்கமாக போயிருந்தால் குறைந்தது 2 மணி நேரமாவது ஆயிருக்குமாம்.

கார்வால் மாவட்டம் தேரி பகுதியில் உள்ள சுகாதார மையத்துக்குத்தான் இந்த மருந்துகள் டிரோன் மூலம் சப்ளை செய்யப்பட்டுள்ளன. ரிஷிகோஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து இந்த டிரோன் செலுத்தப்பட்டது.  இது சோதனை முயற்சியாகவே மேற்கொள்ளப்பட்டது. ஆனால் எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பாக இந்த சோதனை வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனையின் செயல் இயக்குநர் டாக்டர் மீனு சிங் கூறுகையில், உத்தரகாண்ட் மாநிலத்தின் தொலை தூரத்தில், மலைப் பகுதிகளில் வாழும் நோயாளிகளுக்கு மருந்துகளைக் கொடுக்க டிரோன்களைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான சோதனை முற்சியாகவே இந்த மருந்துகள் அனுப்பப்பட்டன. மருந்துகள் போய்ச் சேர்ந்ததும், அங்கிருந்து காசநோய் சோதனை மாதிரிகள் எங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு சரியாக வந்து சேர்ந்தன.

டிரோன் மூலம் மருந்துகளை அனுப்புவதால், நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு அலைய வேண்டியது குறைகிறது. மேலும் மருந்துகளை விரைவாகவும் அவர்களால் பெற முடியும். பாதுகாப்பும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றார் அவர்.

ஜம்மு காஷ்மீரில் முன்பு இந்திய ராணுவம், பனி படர்ந்த பகுதிகளில் ராணுவத்தினருக்கு பூஸ்டர் டோஸ் கோவிட் ஊசி மருந்துகளை அனுப்ப டிரோன்களை முன்பு பயன்படுத்தியது.  அதேபோல மகாராஷ்டிராவிலும் தொலை தூர கிராமங்களுக்கு டிரோன்கள் மூலம் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டன என்பது நினைவிருக்கலாம். அதே பாணியில் தற்போது ரிஷிகேஷ் எய்ம்ஸ் இந்த மருந்து அனுப்பும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.

விரைவில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்தும் இதுபோல தொலை தூர கிராமங்களுக்கு மருந்துகள் அனுப்பும் நாள் வரும் என்று நம்புவோம்!

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!

news

மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்

news

தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்

news

தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?

news

எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!

news

முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!

news

உழவனின் உயிர் நண்பன்!

news

தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்