- இரா. மும்தாஜ் பேகம்
திக்கெட்டும் தமிழ் முழங்க,
தீந்தமிழில்
பாக்கள் ஒலிக்க
மூவேந்தர் வளர்த்திட்ட
என் தமிழ் வளர்ந்திடவே. சங்கே முழங்கு!
குமரிக்கண்டத்திலே
குழந்தையாய்உருவெடுத்து
பன்னிலை வளங்கள் கண்ட
பாண்டியன்வளத்திட்ட தமிழ் என்று
சங்கே முழங்கு!

தேனில் கரும்பில்
தீஞ்சுவையாய்
வானில்கதிரோன்
அறிவொளியாய்
ஊனில்,உயிரில்
கலந்திருக்கும்
உன்னததமிழென்று
சங்கே முழங்கு!
பாரதியும்,பாரதிதாசனும்,
பகுத்தறிவு பெரியாரும்.
வாலியும், வைரமுத்தும்
வளர்த்திட்ட
என் தமிழ் வளர்க என்று
சங்கே முழங்கு!
ஔவையின்ஆத்திச்சூடியை
ஔடதமாய்
ஏற்று நாளும்
வள்ளுவனின் முப்பாலால்
வளர்ந்திட்ட
என் தமிழ் என்று
சங்கே முழங்கு!
தாழை மடல் போல்
தமிழ் மனம் பரவிடவே
ஏடுகளை ஏந்தி
நாம்
வளர்ப்போம் என்று
சங்கே முழங்கு!
(கவிஞர் இரா. மும்தாஜ் பேகம், பட்டதாரி ஆசிரியர்)
ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் யார்? விசாரிக்க சிறப்பு குழு அமைப்பு!
"நிர்வாக அறிவு இருக்கிறதா?" – தவெக அரசை கடுமையாக விமர்சித்து மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
குற்றவாளிகள் ஒருவரையும் விடக்கூடாது: ஜெம் கிரானைட்ஸ் வீரமணி விவகாரத்தில் முதல்வர் அதிரடி உத்தரவு
ஜெம் கிரானைட் வீரமணி விவகாரம்: தவெக-திமுக இடையே முற்றும் மோதல்
ஆளுக்கு 8 ஓட்டு.. 9 மாத மழலை எடுத்துக் கொடுத்த சீட்டு.. கலகலப்பாக முடிந்த பள்ளித் தலைவர் தேர்தல்!
நடிகை அம்பிகா மீது சகோதரி ராதா பரபரப்பு புகார்: ரூ.46 கோடி மோசடி செய்ததாக போலீசில் புகார்
வங்கக்கடலில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!
ஏகாந்தம்.. அழகிய முழு நிலவொளியில் ஆனந்த ராகம் பாடி!
Short Story: காணாமல் போன கண்ணன்
{{comments.comment}}