டில்லி : இந்திய டென்னிஸ் உலகின் ஜாம்பவான் ரோஹன் போபண்ணா, தனது 20 ஆண்டுகால டென்னிஸ் பயணத்திற்கு இன்று அதிகாரப்பூர்வமாக விடைபெற்றுள்ளார். சமூக வலைத்தளங்களில் தனது முடிவை அறிவித்த போபண்ணா, 2017 பிரெஞ்சு ஓபன் கலப்பு இரட்டையர் பட்டத்தையும், 2024 ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். தனது ஓய்வு முடிவை அறிவித்த போபண்ணா, தனது வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்த டென்னிஸிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
"ஒரு விடைபெறுதல்... ஆனால் இது முடிவல்ல. என் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்த ஒன்றிற்கு எப்படி விடை கொடுப்பது? 20 மறக்க முடியாத வருடங்களுக்குப் பிறகு, நான் அதிகாரப்பூர்வமாக என் ராக்கெட்டை கீழே வைக்கிறேன். இதை எழுதும் போது, என் இதயம் கனமாகவும் நன்றியுடனும் இருக்கிறது," என்று போபண்ணா உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் கூர்க் என்ற சிறிய நகரத்தில் இருந்து தனது டென்னிஸ் பயணத்தை தொடங்கிய போபண்ணா, சர்ச்சை வலுப்படுத்த மரக்கட்டைகளை வெட்டியதையும், காபி தோட்டங்களில் ஓடியதையும், உடைந்த கோர்ட்டுகளில் கனவுகளை துரத்தியதையும் நினைவு கூர்ந்துள்ளார். உலகின் மிகப்பெரிய அரங்குகளில் விளையாடியது தனக்கு ஒரு கனவு போல இருப்பதாக அவர் கூறியுள்ளார். டென்னிஸ் தனக்கு வெறும் விளையாட்டாக மட்டும் இல்லை என்றும், அது தனக்கு நோக்கத்தையும், வலிமையையும், நம்பிக்கையையும் கொடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு முறையும் கோர்ட்டில் இறங்கிய போது, விடாமுயற்சி, மீண்டு எழும் மன உறுதி, முடியாதென்று மனம் சொல்லும் போதும் போராடும் குணம் ஆகியவற்றை டென்னிஸ் தனக்கு கற்றுக்கொடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது பெற்றோரை தனது ஹீரோக்கள் என்று போற்றும் போபண்ணா, தனது கனவை நனவாக்க அவர்கள் செய்த தியாகங்களையும், அவர்களின் அமைதியான வலிமையையும், ஒருபோதும் குறையாத நம்பிக்கையையும் நன்றியுடன் நினைவு கூர்ந்துள்ளார். தனது சகோதரி ரஷ்மி, எப்போதும் தனக்கு ஆதரவாக இருந்ததாகவும், தன்னம்பிக்கை அளித்ததாகவும் அவர் கூறியுள்ளார். தனது குடும்பம் தனக்கு ஒரு நங்கூரம் போலவும், பாதுகாப்பான புகலிடமாகவும் இருந்ததாகவும், இன்ப துன்பங்களில் தன்னை தாங்கி நின்ற அன்பிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தனது மனைவி சுப்ரியாவை தனது சிறந்த துணையாக வர்ணித்த போபண்ணா, நீண்ட பயணங்கள், தூக்கமில்லாத இரவுகள், தான் தவறவிட்ட தருணங்கள் என அனைத்தையும் அவரும் தன்னுடன் சேர்ந்து வாழ்ந்ததாகக் கூறியுள்ளார். தான் தனது கனவுகளை துரத்தியபோது, நமது உலகத்தை அவர் மிகுந்த பொறுமையுடன் சுமந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அவரது அன்பும், பொறுமையும், வலிமையும்தான் தனது ஒவ்வொரு வெற்றிக்கும் அமைதியான காரணங்கள் என்று போபண்ணா கூறியுள்ளார்.
தனது மகள் திரிதாவைப் பற்றி பேசும்போது, அவள் தனது உலகத்தைப் பார்க்கும் விதத்தையே மாற்றியதாகக் கூறியுள்ளார். அவளுக்கு ஒரு புதிய நோக்கத்தையும், மென்மையான வலிமையையும் அவள் கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த சில வருடங்களாக தான் விளையாடிய ஒவ்வொரு போட்டியும் அவளுக்காகத்தான் என்றும், கனவுகளுக்காகப் போராடுவது முக்கியம் என்பதையும், அன்பும் தைரியமும் வெற்றி பெறுவதை விட முக்கியம் என்பதையும் அவளுக்குக் காட்ட விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். அவள் தனது இதயம் என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
ரோஹன் போபண்ணா, தனது நீண்ட டென்னிஸ் பயணத்தில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். 2017 ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் கேப்ரியலா டப்ரோவ்ஸ்கியுடன் இணைந்து சாம்பியன் பட்டம் வென்றார். இது அவரது முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். பின்னர், 2024 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் சக வீரர் மேத்யூ எப்டனுடன் இணைந்து ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று தனது கிராண்ட் ஸ்லாம் வெற்றிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கினார். இந்த வெற்றிகள் இந்திய டென்னிஸ் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளன. அவரது ஓய்வு முடிவு இந்திய டென்னிஸ் ரசிகர்களுக்கு ஒரு சோகமான செய்தியாக இருந்தாலும், அவரது சாதனைகள் என்றும் நினைவு கூரப்படும்.
தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!
ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு
அரசின் தோல்விக்காக.. ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது: அன்புமணி
மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை திணிக்கிறது...சித்தராமைய்யா காட்டம்
திமுகவிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்போம்.. 2026ல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம்: தவெக தலைவர் விஜய்
Aadhar update ஆதாரில் இன்று முதல் புதிதாக நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் பற்றி தெரியுமா?
டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஹன் போபண்ணா அறிவிப்பு
ஸ்ரேயாஸ் ஐயர் சிட்னி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
தமிழ்நாடு என்றால் தமிழ் என்ற அடையாளத்தை தமிழகம் இழந்து வருகிறது: அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}