மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் மாற்றப்பட்டதால் எந்தக் குழப்பமும் இல்லை. ரோஹித் சர்மா எப்போதும் எங்களுக்காக இருக்கிறார். அதேபோல ஹர்திக் பாண்ட்யாவும் எங்களுடன்தான் இருக்கிறார் என்று கூறியுள்ளார் மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்ஸ்மேன் திலக் வர்மா.
ஐபிஎல் 2024 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்பட உள்ளார். இதுவரை கேப்டனாக இருந்து வந்த ரோகித் சர்மா மாற்றப்பட்டு ஹர்திக் பாண்ட்யா கேப்டன் ஆகியுள்ளார். இதற்காகவே குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த அவரை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கி, கேப்டன் பதவியையும் கொடுத்துள்ளது. இது பெரும் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இருப்பினும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கேப்டன் மாற்றம் நடைபெற்றுள்ளதாக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் விளக்கம் அளித்திருந்தது.
இந்த நிலையில் இன்று தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாட உள்ளது. முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ் அணியை தலைமை தாங்கி நடத்த உள்ளார் ஹர்திக் பாண்ட்யா. இது ரசிகர்களிடையே கலவையான உணர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இது நாள் வரை ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷியில் மும்பை இந்தியன்ஸ் அணியை பார்த்த அவர்களுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவை பார்ப்பது சற்று சங்கடமாகவும் சிரமமாகவும் உள்ளது.

இருப்பினும் கேப்டன் பதவி மாற்றத்தால் அணியில் எந்த குழப்பமும் மாற்றம் ஏற்படவில்லை, எல்லாமே இயல்பாக நல்லபடியாக இருப்பதாக திலக் வர்மா கூறியுள்ளார். இது குறித்து திலக் வர்மா கூறுகையில், ரோஹித் சர்மா எப்போதும் எங்களுடன் தான் இருக்கிறார். எங்களுக்கு என்ன தேவையோ அதை அவர் சொல்லத்தான் போகிறார், செய்யத்தான் போகிறார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே போல ஹர்திக் பாண்டியாவும் எங்களுடன் தான் இருக்கிறார். எங்களை வழிநடத்துகிறார். எல்லோரும் எல்லா இடத்திலும் அப்படியேதான் இருக்கிறோம்.
யாரும் எந்த விஷயத்துக்காகவும் மாறவில்லை. எல்லோரும் இணைந்து ஒரு அணியாக நாங்கள் இந்த தொடரை அணுகுகிறோம் என்று கூறியுள்ளார் திலக் வர்மா. ஹர்திக் பாண்ட்யா, கேப்டன்சியில்தான் இந்திய அணியில் அறிமுகமானார் திலக் வர்மா. இப்போது அதே ஹர்திக் பாண்டியாவின் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணியிலும் அவர் விளையாட உள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் நான் ஹர்திக் பாண்டியாவின் தலைமையில் தான் இந்தியாவுக்காக விளையாடினேன். அது சிறப்பான ஒரு தொடக்கமாக அமைந்தது. இப்பொழுதும் அதேபோல ஹர்திக் பாண்டியாவின் தலைமையின் கீழ் விளையாட உள்ளேன். அனைவரும் சிறப்பான உறவுடன் நல்ல ஒரு நட்புடன் தோழமையுடன் இருந்து வருகிறோம். எங்களுக்கு இந்த தொடர் மிக மிக முக்கியமானது சிறப்பான தொடராக இது அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று கூறியுள்ளார் திலக் வர்மா.
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}