டெல்லி விமான நிலை மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில்.. பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது

Jun 28, 2024,10:04 AM IST

டெல்லி: டெல்லியில் பெய்த பலத்த மழையால் விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. 8க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதன் காரணமாக முதலாவது டெர்மினலில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.


டெல்லியில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலையில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இந்த மழை காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் முதலாவது டெர்மினலில் உள்ள மேற்கூரை இடிந்து விழுந்தது. கூரையைத் தாங்கி நிற்கும் இரும்புத் தூண்கள் முறிந்து விழுந்ததால் மேற்கூரை அப்படியே கீழே விழுந்து விட்டது.


இந்த விபத்தில் பலர் சிக்கிக் கொண்டனர். அதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். 8 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர். சில கார்களும் இடிபாடுகளில் சிக்கி சேதமடைந்தன. இந்த நிலையில் தற்போது மேலும்  2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.




இந்த விபத்து காரணமாக முதலாவது டெர்மினலில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. முதலாவது டெர்மினலில் உள்நாட்டு விமான சேவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது முதலாவது டெர்மினல் மூடப்பட்டுள்ளதால் உள்நாட்டு விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 2 மணி வரை இங்கு சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற்பகலுக்கு மேல்தான் விமான சேவை தொடங்கும் என்று தெரிகிறது.


காலை 5.30 மணிக்கு பெய்த பேய் மழையில் விமான நிலையம் சிக்கிக் கொண்டது. பல கார்கள், வாகனங்கள் இதில் சிக்கி நசுங்கிப் போய் விட்டன. உயிரிழந்த நபர் காருக்குள் சிக்கியிருந்தார். அவரது உடலில் இரும்புக் கம்பி பாய்ந்திருந்ததாக மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். மீட்பு மற்றும் சரி செய்யும் பணிகளை மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கிஞ்சிரப்பு நேரடியாக பார்வையிட்டு முடுக்கி விட்டு வருகிறார். மீட்புப் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


ஆசியாவின் மிகப் பெரிய விமான நிலையங்களில் ஒன்றான டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மழை நீரில் மிதக்கும் டெல்லி


இதற்கிடையே, கன மழை காரணமாக டெல்லியே மிதக்கிறது. டெல்லியின் பல்வேறு பகுதிகள் சுரங்கப் பாதைகள் நீரில் மூழ்கியுள்ளன. வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை நீர் வடிகால் கால்வாய்கள் நிரம்பி வழிகின்றன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

சமீபத்திய செய்திகள்

news

புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி

news

கடலும் கடலின் ஒரு துளியும்!

news

இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

அதிகம் பார்க்கும் செய்திகள்