- அ.கோகிலா தேவி
சென்னை: பிரதமர் சூர்ய கர் திட்டத்தின் அடிப்படையில் நாடு முழுவதும் 1 கோடி வீடுகளுக்கு சூரிய மின் சக்தி அமைப்பை நிறுவி அதன் மூலம் மாதந்தோறும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குகிறது.
வீட்டுக் கூரைகளில் சூரிய மின்சக்தி அமைப்புகளை நிறுவி தூய்மையான மற்றும் மலிவான மின்சாரத்தை 10 மில்லியன் (1 கோடி) குடும்பங்களுக்கு வழங்குவதற்காக இந்தியாவிற்கு ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) 650 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ₹5780 கோடி) நிதிக் கடனை அங்கீகரித்துள்ளது.
வீடுகளுக்கு சூரிய மின்சக்தி அமைப்பை நிறுவுவதற்கான ஆரம்ப முதலீடு மிக அதிகமாக இருக்கும். இந்த கடன் பிணையம் தேவையில்லாத குறைந்த வட்டியிலான கடன்களை குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வழங்குவதை எளிதாக்குகிறது. இது நிதி நெருக்கடியில் தடுமாறும் பல குடும்பங்களுக்கு நேரடியான பயனளிக்கும்.

இத்திட்டத்தின் மூலம் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் மாத மின்சாரக் கட்டணம் பெருமளவு குறையும். இது அவர்களுக்கு ஆண்டுக்கு ₹15000 முதல்₹18000 வரை சேமிப்பை தரும். உபரி மின்சாரத்தை மின் கட்டமைப்புக்கு விற்க அனுமதிப்பதால் இத்திட்டம் பல குடும்பங்களுக்கு வருமானத்தை ஈட்டி தரும் ஒரு வழியாகவும் மாறுகிறது.
2026 ஆம் ஆண்டுக்குள் 40 GW கூரை சூரிய சக்தி திறனை நிறுவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டாலும். போதுமான மனிதவளம் இல்லாததால் அதன் முன்னேற்றம் மெதுவாக உள்ளது. கிராமப்புற மற்றும் நடுத்தர நகர்புற மக்களிடையே சூரிய மின்சக்தியின் நன்மைகள் மற்றும் மானிய விவரங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்.
(அ.கோகிலா தேவி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
கரூர் வழக்கு.. 2வது சிபிஐ விசாரணை முடிவுக்கு வந்தது.. புன்னகையுடன் வெளியேறிச் சென்ற விஜய்!
2026ம் ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டம்.. நாளை கூடுகிறது.. ஆளுநர் உரையாற்றுவாரா?
அடுத்த திட்டம் என்ன?...ஆதரவாளர்களுடன் சசிகலா தீவிர ஆலோசனை
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன30ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு.. இதுவரை 12.80 லட்சம் பேர் மனு
மீண்டும் மீண்டும் தள்ளிப் போகும் தெறி ரீ ரிலீஸ்...காரணம் இது தானா?
71 மாவட்டங்களுக்கும் தலைவர்கள்.. ஒரு வழியாக அறிவித்தது காங்கிரஸ்!
தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் வெள்ளி விலை... இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.1,360 உயர்வு
அமைதி .. சத்தம் இல்லாமல் வந்தபோது...!
சிவபெருமானின் முழு அருளை பெற இந்நன்நாளை தவற விடாதீர்கள்
{{comments.comment}}