"ரோட்டர்டாம்".. சர்வதேச திரைப்பட விழாவில்.. பாராட்டுகளை குவித்த .. ஏழு கடல் ஏழுமலை!

Feb 08, 2024,04:50 PM IST

சென்னை: இயக்குனர் ராம் இயக்கத்தில், வி ஹவுஸ் தயாரிப்பில், உருவான ஏழு கடல் ஏழுமலை திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டுகளை பெற்றுள்ளதாம். இதில் பிக் ஸ்கிரீன் போட்டி பிரிவிற்காக இப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


பல்வேறு மொழி, மதம், இனம், கலாச்சாரம் ,போன்றவற்றைக் கடந்து தமிழ் சினிமா தற்போது இன்றியமையாதவையாக கருதப்படுகிறது. இதில் தமிழ் சினிமாவின் மிகத் தனித்துவமான மற்றும் காலத்தை வென்ற படைப்புகள் உலக அரங்கில் பாராட்டுகளையும், கவனத்தையும் ஈர்க்கும் வகையில் உள்ளது. அந்த வகையில் ஏழு கடல் ஏழுமலை திரைப்படத்தின் விமர்சனங்கள் உலக அரங்கில் பார்வையாளர்களின் பெரும் வரவேற்பு பெற்று உள்ளது.




இந்நிலையில் சமீபத்தில் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. இதில் பிக் ஸ்கிரீன் போட்டி வைக்கப்பட்டது.இதில் தேர்வு செய்யப்பட்ட ஏழு கடல் ஏழுமலை திரைப்படம் ரோட்டர்டாம் நகரில் சிறப்புமிக்க பாதே சினிமாஸ் திரையரங்கில் 3 ஷோக்கள் பொதுமக்களின் பார்வைக்காக  திரையிடப்பட்டது.


இப்படம் திரையிட்ட போது அரங்கம் முழுதும் அதிரும் கைதட்டல்களால் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்ததாம். மேலும் கவிதை போல அழகாகவும், வியக்கத்தக்க காட்சி அமைப்புகளை கொண்ட இப்படம் ஒரு தலைசிறந்த படைப்பாக கருதப்படுகிறது. இப்படம் இந்திய சினிமாவில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்துள்ளதாக பலரும் பாராட்டி உள்ளனராம். 




இப்படத்தில் பணியாற்றிய அனைவரும் பெருமிதமும், மகிழ்ச்சியும், அடையும் தருணமாக சர்வதேச திரைப்பட நிகழ்ச்சி அமைந்தாம்.ஏழு கடல் ஏழுமலை திரைப்படம் உலக அளவில் நல்ல வரவேற்பு பெற்றதோடு ரசிகர்களையும் கவனத்தையும் ஈர்த்துள்ளதாம்.


இந்நிலையில் தரமான கதைகளை சொல்லும் திரைப்படங்களை தயாரித்து தமிழ் சினிமாவின் தனித்துவத்தை உணர்த்தும் அனுபவங்களை தொடர்ந்து வழங்குவதற்கும் வி ஹவுஸ் தயாரிப்பு நிறுவனம் உறுதியுடன் செயல்பட தயாராகி உள்ளதாம்.




ஏழு கடல் ஏழுமலை திரைப்படம்:


இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்  ஏழு கடல் ஏழுமலை. இவர் தங்க மீன்கள், பேரன்பு போன்ற படங்களை இயக்கியுள்ளார். மாநாடு படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் இப்படத்தையும் தயாரித்துள்ளார்.




இளைஞர்களின் அனைவரது மனதையும் கொள்ளை கொண்ட பிரேமம் பட நடிகர் நிவின் பாலி இப்படத்தில் நடிகராகவும், அஞ்சலி நாயகியாகவும், சூரி குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்