மதுரை: டிக் டாக் புகழ் ரவுடி பேபி சூர்யா மற்றும் அவருடைய கணவரான சிக்கா என்ற சிக்கந்தர் ஆகியோரை மதுரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.
கோவையைச் சேர்ந்த யூடியூபர் சித்ராவுக்கு மிரட்டல் விடுத்ததாக போலீசார் இந்த இருவரையும் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம் திருநகரை சேர்ந்தவர் சுப்புலட்சுமி. இவர் டிக் டாக்கில் ரவுடி பேபி சூர்யா என தனது பெயரை மாற்றிக் கொண்டு வீடியோ போட்டு வந்தார். அவரது குண்டக்க மண்டக்க வீடியோக்களால் வேகமாக பிரபலமடைந்தார்.
ஆபாசமான பேச்சு மற்றும் ஆபாசமான செய்கைகள் அடங்கிய அவரது வீடியோக்களால் ஏராளமான ரசிகர்களைப் பெற்ற இவர் அவ்வப்போது சர்ச்சையிலும் சிக்கி வந்தார். இந்த நிலையில்தான் விபச்சாரம் செய்ததாக கூறி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் வெளியே வந்தார்.

இவருடன் இவரது கணவராக கூறப்படும் சிக்கந்தரும் சேர்ந்தே சிறைக்குப் போயிருந்தார். இந்த நிலையில், கோவையைச் சேர்ந்த யூடியூபர் சித்ரா என்பவர் மக்கள் பார்வை கல்வி அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதன் பெயரிலேயே யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்த சேனலில் சிக்கந்தரை பற்றிய அவதூறான விஷயங்களை சித்ரா வெளியிட்டதால் சிக்கந்தர் ஆத்திரமடைந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து பதிலுக்கு சிக்கந்தரும் சித்ராவை வம்பிக்கிழுத்து கேலி செய்து வீடியோ போட ஆரம்பித்தார். இந்த நிலையில் சித்ரா சார்பில் மதுரை சைபர் கிரைம் போலீஸில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு புகார் தரப்பட்டது. அதில், தனது மகளின் அந்தரங்களை வீடியோவாக வெளியிடுவேன் என கூறி சிக்கந்தரும், சூர்யாவும் மிரட்டல் விடுவதாக கூறியிருந்தார்.
மகளைப் பற்றி அவதூறாக பேசியதால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. சிக்கந்தர் மற்றும் ரவுடி பேபி சூர்யா இருவரும் தன்னை மிரட்டுவதாகவும் இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தாதர் சித்ரா. இதன் அடிப்படையில் மதுரை சைபர் கிரைம் போலீசார் ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தரை இன்று கைது செய்தனர்.
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}