மும்பை: மும்பைக்கு வந்து கொண்டிருந்த ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் நான்கு பேர் உயிரிழந்தனர். கொல்லப்பட்டவர்களில் ஒருவர் உதவி சப் இன்ஸ்பெக்டர் ஆவார்.
மகாராஷ்டிரா மாநிலம் பால்கார் ரயில்வே நிலையம் அருகே ரயில் வந்து கொண்டிருந்தபோது இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. துப்பாக்கியால் சுட்ட போலீஸ்காரரை தற்போது ரயில்வே போலீஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரின் பெயர் சேட்டன் சிங். ரயில்வே பாதுகாப்புப் படை கான்ஸ்டபிள் ஆவார். இவர் தன்னிடமிருந்த அதிகாரப்பூர்வ தானியங்கித் துப்பாக்கியால் சுட்டுள்ளார். காலை 5 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 3 பயணிகள், சக போலீஸ்காரர் மற்றும் உதவி சப் இன்ஸ்பெக்டர் டீக்கா ராம் மீனா ஆகியோரை இவர் சுட்டுள்ளார். அதில் சுடப்பட்ட ஆர்பிஎப் வீரர் மட்டும் உயிர் தப்பினார். மற்ற நான்கு பேரும் உயிரிழந்து விட்டனர்.
முதலில் உதவி சப் இன்ஸ்பெக்டரை சுட்டுக் கொன்ற சேத்தன் சிங் அதன் பின்னர் அடுத்த பெட்டிக்குப் போய் அங்கிருந்த 3 பயணிகளை சுட்டுக் கொன்றார். இந்த கொலை பாதக செயலை செய்து ரயிலின் அவசர கால சங்கிலியைப் பிடித்து இழுத்து தப்பி ஓட முயன்றார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் அவரை மடக்கிப் பிடித்தனர்.
தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!
மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்
தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?
எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!
முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!
உழவனின் உயிர் நண்பன்!
தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!
{{comments.comment}}