சென்னை: பொங்கல் பரிசுத்தொகுப்புடன் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 1000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார் முதல்வர் மு. க. ஸ்டாலின்.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை ஒட்டி ரேஷன் கடைகளில் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, ரொக்கப் பரிசு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பொங்கல் பரிசு முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசுத்தொகுப்புடன், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூபாய் 1000 ரொக்கம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வரும் நிலையிலும் பொங்கல் பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேசமயம், அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்களுக்கு பொங்கல் பரிசு ரூபாய் 1000 ரொ க்கம் வழங்கப்பட மாட்டது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை அடுத்து அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்க வேண்டும் என பவ்வேறு தரப்பினறும் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வரம்பு ஏதும் இன்றி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூபாய் 1000 வழங்கப்படும் என முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். அத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவையும் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கு பொதுமக்கள் ரேஷன் கடைகளில் கூட்டமாக கூடி விடக்கூடாது என்பதற்காக டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}