மும்பை: ரூ. 9760 கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுக்கள் இன்னும் திரும்பி வரவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
2016ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அதிரடியான ஒரு நடவடிக்கையை எடுத்தது. அதாவது அதுவரை புழக்கத்தில் இருந்து வந்த ரூ. 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை ஒழித்து விட்டு புதிதாக ரூ. 2000 நோட்டை அறிமுகப்படுத்தியது.
இருப்பினும் இந்த ரூபாய் நோட்டும் கடந்த சில ஆண்டுகளாக புழக்கத்தில் குறைந்து விட்டது. ரூபாய் நோட்டை அச்சிடுவதை நிறுத்தி விட்ட நிலையில் புழக்கத்தில் உள்ள நோட்டுக்கள் மட்டுமே உலா வந்து கொண்டிருந்தன. அதுவும் கூட நாளடைவில் குறைந்து கொண்டே வந்தது.

இந்த நிலையில் 2000 நோட்டை திரும்பப் பெறுவதாக கடந்த மே 19ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. அந்த நோட்டைத் திருப்பித் தருவதற்கும் காலக்கெடு விதிக்கப்பட்டது. அந்தக் காலக்கெடுவும் தற்போது முடிந்து விட்ட நிலையில் இதுவரை 96 சதவீத நோட்டுக்களே திரும்பி வந்துள்ளதாம். இன்னும் ரூ. 9760 கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுக்கள் திரும்பி வரவில்லை என்று ரசிர்வ் வங்கி கூறியுள்ளது.
தற்போது 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் கூட கையில் அதை வைத்திருப்போர் இந்தியா முழுவதும் உள்ள 19 ரிசர்வ் வங்கி கிளைகளில் ஒப்படைக்கலாம். தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ இதைச் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக செப்டம்பர் 30ம் தேதி வரை இதற்கான அவகாசம் தரப்பட்டது. பின்னர் இது அக்டோபர் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன் பிறகு இப்போது ரிசர்வ் வங்கிக் கிளைகளில் மட்டுமே இதை மாற்ற வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை, அகமதாபாத், பெங்களூரு, போபால், பேலாப்பூர், புவனேஸ்வர், சண்டிகர், குவஹாத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, லக்னோ, கொல்கத்தா, கான்பூர், மும்பை, நாக்பூர், டெல்லி, பாட்னா, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் இந்த ரூபாய் நோட்டுக்களை ஒப்படைக்கலாம்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}