ரசிப்பேனென சொன்னால்!

Aug 26, 2026,11:26 AM IST

- மொழிப்பித்தன் இரா ச குமார்


ரசிக்க நானிருக்கிறேன்

நீயெழுதென

சொல்பவரா நீங்கள்

உங்களுக்கே உங்களுக்காக 

நானுமெழுதுவேன்

நாளுமொரு கவிதை...


உங்களிடமொரு கோரிக்கை

எழுதுகோலின் விருப்பத்துக்கு

விட முடியுமா?..




இதையெழுது 

அதையும் சேர்த்தெழுதெனும் 

கட்டாயப்படுத்தலை 

தவிர்க்கவும்

கூடவும் கூடாது

காரணம்

இந்த 

எழுதுகோலிருக்கிறதே 

எழுது கோல்

எழுத மறுக்கும்

ஏடாகூடமாய் கோபப்படும்...


தானே

சிலப்பதிகாரமெழுதியதாய் 

நினைப்பு

திமிர்

அகம்பாவம் ஆணவம்

கண்டதை கிறுக்கி கவிதையென சொல்லும் இந்த

எழுதுகோலுக்கு...


சுருக்கமாய் சொன்னால்

என் எழுதுகோலுக்கு 

கொஞ்சம்

நானே 

நான் மட்டுமே

எனுமொரு மமதை...


காட்டிக்கொள்ளாது 

பவ்யமாய் 

இருக்கும்

அத்தனையும் நடிப்பென அறிக...


ஒருவேளை

அன்பொழுக கேட்டுக்கொண்டால் 

நிறைய நிறைய

கொள்ளவு தாண்டியும்

தனக்குள் 

வழிய வழிய

மை

நிரப்பி

ஆரவரித்து 

கும்மாளமிட்டு 

எழுதும் 

என்னென்னவோ

எண்ணற்ற தலைப்புகளில்

எழுதுமிந்த எழுதுகோல் ...!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வடகிழக்கு பருவமழை: 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்...தமிழகத்தில் வெளுத்து வாங்க போகும் மழை

news

தென்தமிழ் தலையங்கம்: உயிருக்குக் குறி வைத்த ஒரு சொல்.. அனோஜன் கற்றுக் கொடுத்த பாடம்!

news

இந்தியாவை விட்டு வெளியேற பாலிவுட் நடிகர் இம்ரான் கானுக்கு உத்தரவு

news

Know about El Nino: அக்டோபர் அனலும் எல் நினோவும்..!

news

Evening Motivation: கதையல்ல நிஜம்: அந்தக் காலம் vs இந்தக் காலம்!

news

தாய்க்காக எதையும் இழக்கலாம்.. ஆனால் யாருக்காகவும் தாயை இழந்து விடாதீர்கள்!

news

“மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போங்க முதலமைச்சரே!”: மு.க.ஸ்டாலின் கடும் சாடல்!

news

நகைகள்.. அன்று மாதவி அணிந்த ஆபரணங்கள் என்னென்ன தெரியுமா?

news

North East Monsoon: மக்களே குட் நியூஸ்.. தொடங்கியது வட கிழக்குப் பருவ மழை.. வானிலை மையம் அறிவிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்