டில்லி : தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 9000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம், கர்நாட க அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் தமிழ்நாட்டிற்குத் தேவையான தண்ணீரைத் திறந்துவிடக் கோரி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டங்களில் தொடர் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறப்பது தொடர்பாகக் காவிரி மேலாண்மை ஆணையம் மிக முக்கியமான உத்தரவு ஒன்றை இன்று பிறப்பித்துள்ளது.
முன்னதாக, தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 9,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்திருந்தது. இந்த நிலையில், ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட காவிரி மேலாண்மை ஆணையம், தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 9,000 கன அடி வீதம் காவிரி நீரைத் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது.

அதே வேளையில், இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் வைக்கப்பட்ட கூடுதல் நீர் திறப்பு தொடர்பான முக்கிய கோரிக்கை ஒன்றை ஆணையம் நிராகரித்துள்ளது. குறுவை சாகுபடி மற்றும் டெல்டா மாவட்டங்களின் விவசாய நீர்த் தேவைகளைக் கருத்தில் கொண்டு, நாளொன்றுக்கு 1.9 டி.எம்.சி (TMC) வீதம் அடுத்த 15 நாட்களுக்கு நீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் பலமான கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், தமிழகத்தின் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த காவிரி மேலாண்மை ஆணையம் அதனை நிராகரித்துவிட்டது.
காவிரி பாசனப் பகுதிகளில் விவசாயப் பணிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவு தற்காலிகமாக ஓரளவுக்கு நிவாரணம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், தமிழ்நாடு அரசு கோரிய 1.9 TMC அளவிலான நீர் கிடைக்காததால், டெல்டா மாவட்டங்களின் முழுமையான பாசனத் தேவையை இந்த 9,000 கன அடி நீர் பூர்த்தி செய்யுமா என்ற கவலை விவசாயிகளிடையே நீடித்து வருகிறது.
ஏற்கனவே பலமுறை காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்தும் அதை நிறைவேற்றி, தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவிற்கு கர்நாடகா எந்த மாதிரியான பதிலளிக்க உள்ளது என அறிய அனைவரும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.காவிரியில் எப்போது தண்ணீர் திறந்து விடப்படும் என சட்டசபையில் எதிரிக்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு, விரைவில் நல்ல செய்தி வரும் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் இன்று கூறி இருந்தார். இது தான் அந்த நல்ல செய்தியா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி
தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!
மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!
தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!
தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!
{{comments.comment}}