சென்னை: ஐபிஎல் 2024 தொடரின் முதல் போட்டி நாளை சென்னையில் நடைபெற உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து மகேந்திர சிங் தோனி விலகி உள்ளார். அவருக்கு பதிலாக சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி தோனி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாளை மாலை 8 மணிக்கு சென்னை எம் ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது.
முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்காக வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் முதல் போட்டியை காண ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடி வரும் தோனிக்கு, இந்த ஐபிஎல் தொடரே கடைசி தொடராக இருக்கும் என பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து மகேந்திர சிங் தோனி விலகி உள்ளார். தோனிக்கு பதிலாக சென்னையின் கேப்டனாக தொடக்க ஆட்டக்காரர் ருத்துராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று நடந்த கோப்பை அறிமுக நிகழ்ச்சியில், சென்னை அணியின் சார்பாக ருத்துராஜ் கெய்க்வாட் பங்கேற்றார்.
இது நாள் வரை கேப்டன் தோனிக்காகவே ஐபிஎல் தொடரை அதிக அளவில் ரசிகர்கள் பார்த்து வந்தனர். ஆனால் கேப்டனாக ருத்துராஜ் நியமிக்கப்பட்டிருப்பது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தோனியிடம் இருக்கும் அந்த கிரேஸ் இனி போட்டிகளில் இருக்காது என்று ரசிகர்கள் புலம்ப ஆரம்பித்து விட்டனர். கேப்டன் பொறுப்பில் இருந்து விடுபட்டுள்ள தோனி நடப்பு ஐபிஎல் சீசனில் விளையாடுவாரா என்ற சந்தேகமும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
மறுபக்கம், புதிய கேப்டனாகியுள்ள ருத்துராஜ் கெய்க்வாட்க்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 ஐபிஎல் சாம்பியன் பட்டங்களையும், 2 சாம்பியன்ஸ் லீக் பட்டத்தையும் வென்றுள்ளது. மேலும் ஐபிஎல் தொடரில் மிகுந்த திறமையான் அணிகளில் ஒன்றாகவும் சிஎஸ்கே திகழ்ந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் கேப்டனாக 226 போட்டிகளில் சிஎஸ்கேவை வழி நடத்தியுள்ளார் தோனி. அதில் 133 போட்டிகளில் சிஎஸ்கே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்கூல் பெஞ்ச்.. என் ஸ்கூல் அனுபவங்கள் (பார்ட் 1)
விண்வெளியில் இந்தியாவின் வரலாற்று சாதனை.. புவி கண்காணிப்பு செயற்கைக் கோளை செலுத்தியது
CJP in Crisis: காக்ரோச் ஜனதாக் கட்சியில் திடீர் பிளவு.. புதிய அமைப்பு பிறந்தது!
அரசு பள்ளி மாணவர்களுக்கு கணினி கல்வி மறுக்கப்படுகிறதா?.. 60,000 கணினி ஆசிரியர் குடும்பங்கள் கேள்வி
வானொலியுடன் என்றும் இணைந்து இருங்கள்: மாணவர்களுக்கு அறிவிப்பாளர் வேல்முருகன் அறிவுரை
It's Okay mean, It's not Okay. But it's Okay
செல்வமா? செல்வாக்கா?
"கதிரவனாய் இருக்கிறாய் மெழுகுவர்த்தியாய் தியாகம் செய்கிறாய்!"
கொட்டுகிற மழையினிலே குடையின்றி நடந்து வந்தேன் !
{{comments.comment}}