வேண்டுதல்!

Mar 23, 2026,12:01 PM IST

- ஆனந்தி.ச


“பூஜா குட்டி “என கூப்பிட்டவாறே பைக்கை போர்ட்டிகோவில் நிறுத்தினான் கபில்.


“பூஜா அப்பா வந்தாச்சு போலருக்கு,கூப்பிடுறாரு போய் பாரு” என்றாள் கார்த்திகா பூஜாவிடம்.


“அப்பா.. கத்தியபடியே ஓடிவந்து கபிலை கட்டிக்கொண்டாள் பூஜா.


“அம்மாவும் நீயும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க  ?  என்றான் கபில்


“நாங்க ரெண்டு பெரும் தம்பி பாப்பாவுடன் பேசிக்கொண்டுருக்கோம்” சொன்ன பூஜா கபிலின் கையை பிடித்த படி உள்ளே சென்றாள்.


தான் வாங்கி வந்த பழங்களை டேபிளில் வைத்தவாறு “தம்பி பாப்பா என்ன சொல்றாரு ? என்றான் கபில்.


“அப்பாவை தினமும் ஆபீஸிலிருந்து சீக்கிரம் வரச்சொல்றாரு “ என்றாள் கார்த்திகா. 


“ம்ம் அப்பா சீக்கிரமா வந்தா வேலையை யார் பார்ப்பாங்களாம் ? சம்பளம் எப்படி கிடைக்குமாம் ? என்றவாறே பாத்ரூமை நோக்கி சென்றான்.




வெளியே வந்தவன் .. “ நாளைக்கு  செக்கப்பிற்கு போகணும் என்ன சரியா? அம்மாவும் பொண்ணும் நாளைக்கு சாயந்திரம் 6 மணிக்கு ரெடியா இருங்க நான் வந்தவுடனே போலாம் என்றான்.


பூஜாவிற்கு வயது 8 ஆகிறது மூன்றாவது படிக்கிறாள். மிகவும் சுட்டி ,வாயாடி ,அதி புத்திசாலியும் கூட.  

கார்த்திகாவிற்கும் கபிலுக்கும் அடுத்த குழந்தை பெற்றுகொள்ள ஆசையேதுமில்லை. 


பூஜாவை வளர்ப்பதற்கே மிகவும் திண்டாடித்தான் போனார்கள் .எதிர்பாராமல் உண்டான கரு .. மேலும் பூஜாவின் தம்பி வேண்டுமென்ற ஆசையால், அதை கலைக்க மனமில்லாமல் இருந்தனர் இருவரும் . 


மறுநாள் ஆஸ்பத்திரி போகும்வழியெல்லாம் பூஜா அப்பாவையும் அம்மாவையும் நச்சரித்துக்கொண்டே வந்தாள் பூஜா.


“டாக்டர் தம்பி பாப்பாவை படத்துல காட்டுவாரா? யாரை மாதிரி இருக்கும்? என்ன மாதிரியே இருப்பானா? “ என்றவளை அடக்கினர் இருவரும் . 


“பூஜா பேசாமல் வந்தால் உனக்கும் ஐஸ்கிரீம் “ என்றவுடன் வாயை மூடியவள் ஆட்டோவில் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். 


ஆஸ்பத்திரியில் கூட்டம் கொஞ்சமாக தான் இருந்தது . அவர்களுக்கு முன்னர் மூன்று பேர் தான் இருந்தனர். 


அங்கிருப்பவர்கள் பேசுவதையே அழகாக பார்த்துக்கொண்டிருந்தாள் பூஜா.


 “கார்த்திகா உள்ள வாங்க “என்றார் நர்ஸ்.


கார்த்திகா காலெடுத்து இறங்கும்முன். துள்ளி டாக்டர் அறைக்கு ஓடினாள் பூஜா. பூஜாவை பார்த்ததும் சிரித்தபடியே “வாங்க மேடம் எப்படியிருக்கீங்க என்று வினாவினார் டாக்டர் நிமி.


பூஜா பிறந்ததும் இந்த ஹாஸ்பிட்டலில்தான். பூஜாவும் அம்மாவுடன் அடிக்கடி வருவதால்தான் , அவளுக்கு இந்த உபசரிப்பு.


"ஹாய் டாக்டர் .. நான் நல்லாயிருக்கேன் .. நீங்க எப்படியிருக்கீங்க? கண்ணை உருட்டியபடியே தலையை ஆட்டியபடியே பேசினாள்.


“சூப்பர்” என்றபடியே கன்னத்தில் கிள்ளிய டாக்டர் நிமி” பெரியமனுஷி செக்கப்புக்கு வந்துட்டாங்க என்றவள் .


பூஜாவை அங்கேயே உட்காரவைத்து திரைக்குபின் சென்று கார்த்திகாவை செக் பண்ண ஆரம்பித்தாள்.


ஸ்கேன் பண்ண சொன்னாள் ஸ்கேன் முடிந்தவுடன் ரிசல்ட்டிற்காக காத்திருந்தனர் .


ஆமா உனக்கு தம்பி பாப்பா வேணுமா? தங்கச்சி பாப்பா வேணுமா? என்று பூஜாவை கேட்டார் நிமி.


“எனக்கு எந்த பாப்பானாலும் ஓக்கே தான் ஆனா தம்பி யா இருந்தா பெட்டரா இருக்கும்” 


ஓ அப்படியா ? ஏன் தம்பி பெட்டர்? 


“தங்கச்சி பாப்பான்னா அவ எனக்கு போட்டியா இருப்பாளே , தம்பின்னா அப்படி இருக்காது”


அவளின் பதிலைக்கேட்ட நிமி குபீரென சிரித்துவிட்டாள்.


“வாயாடி வாங்க“ என கூப்பிட்டு கன்னத்தை கிள்ளி அவளுக்கு சாக்லேட் கொடுத்தாள் டாக்டர் நிமி. 


ஸ்கேன் ரிசல்ட்ஸ் வரவே  படித்த டாக்டர் நிமியின் முகம் மாற்றமடைந்ததை கார்த்திகவும் கபிலும் மட்டுமல்லாமல் பூஜாவும் பார்த்தாள் .. 


“பூஜா குட்டி நீகொஞ்சம் வெளிய இரும்மா” என்றாள் நிமி


ஆனால் பூஜாவோ வெளியே செல்ல தயாராக இல்லை ..


“என்ன ஆச்சு டாக்டர் ஆண்டி? என்றவாறே டாக்டரின் டேபிளை இருக்கப்பற்றினாள்.


அவளின் உள்மனதில் ஏதோ தப்பாக தோன்றியது .. கார்த்திகா கபிலும் எவ்வளவு கெஞ்சியும் கொஞ்சியும் கேட்டனர். அவளுக்கு பிடித்த பலவற்றை லஞ்சமாக அளிப்பதாக கூறியபொழுதும் அவள் அசரவே இல்லை. அவளின் கண்கள் டாக்டரையே பார்த்தவாறே .என்ன கூறப்போகிறார்கள் என்பதிலேயே இருந்தது.


அல்ட்ரா சோனிக் ஸ்கேன் செய்ததில் உங்க குழந்தையின் கழுத்து தடிமனா இருக்கு. இது டவுன் சின்ரோமின் அறிகுறிகள். உங்க குழந்தை டவுன் சின்ரோமுடன் பிறப்பதற்கு சாத்தியக்கூறுகள் அதிகமா இருக்கு என்றாள்.


இதைகேட்டவுடன் கார்த்திக்காவும் கபிலும் அழ ஆரம்பிக்க ..  இதற்காக  நீங்க கடவுள் கிட்ட வேண்டிக்கங்க .. சொல்லமுடியாது சில சமயம் குழந்தை நல்லபடியா பிறக்கவும் வாய்ப்பு இருக்கு.. ஆனால் சதவீதம் மிக குறைவுதான்.


“இந்த குழந்தை வேண்டாம் டாக்டர் .. கலைச்சிடலாமா? “ கபில் கேட்டவுடன் கார்த்திகா மிக சத்தமாக அழத்துவங்கினாள் ..


இது வரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பூஜாவோ ..


“அம்மா அழாதீங்க நம்ம தம்பிக்கு ஒன்னும் ஆகாது . நான் சாமிக்கிட்ட வேண்டிக்கிறேன் .”


அப்படியே தம்பி ஏதாவது குறையுடன் பிறந்தாலும் நான் அவனை நல்லா பார்த்துப்பேன் என்று கார்த்திகாவின் கண்களை துடைத்துவிட்டாள் பூஜா.


பூஜா பேசியதை கேட்டவுடன் வாயடைத்து போனார்கள் கார்த்திகாவும் கபிலும். டாக்டர் நிமி அவளை அழைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்து .. “வெரி குட்  உன் தன்னம்பிக்கையின் முன்னாடி தம்பிக்கு ஏதுவும் ஆகாது, சரியா? 

அம்மாக்கு எழுதி கொடுக்கற மாத்திரையை ஒழுங்கா சாப்பிட வைப்பது உன் பொறுப்பு என்ன? என்றவாறே எழுதத்தொடங்க.


கார்த்திகாவும் கபிலும் கண்ணீர் மல்க பூஜாவை இறுக்க அணைத்தனர். குழந்தையின் வேண்டுதலுக்கு கடவுள் கட்டாயம் செவி மடுப்பார்.


(ஆனந்தி ச, பட்டதாரி ஆசிரியர் ( ஆங்கிலம்), அ மே நி ப கண்டிகை, செங்கல்பட்டு மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

27 நட்சத்திரங்களும் அதற்குரிய சித்தர்களும்!

news

தமிழகம் வாழ வேண்டும் என்றால்... திமுக வீழ வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி

news

தொடர் சரிவில் தங்கம் விலை... இன்றும் சரவனுக்கு ரூ.5,840 குறைவு!

news

தேமுதிக.,வுக்கு எத்தனை சீட்? மாவட்டச் செயலாளர்களுடன் அவசர ஆலோசனை

news

திமுக தரும் 5 தொகுதிகளை ஏற்பதா? வேண்டாமா? சிபிஎம் அவசர ஆலோசனை

news

NDA கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தீவிரம்... அமமுக 10, பாஜக 29 இடங்களில் போட்டியா?

news

தேர்தலில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி போட்டி இல்லையா?

news

நீரே ஆதாரம்.. வாழ்வின் மூலாதாரம்.. Water is Life

news

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செம மழை காத்திருக்கிறது.. தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்!

அதிகம் பார்க்கும் செய்திகள்