- ஸ்வர்ணலட்சுமி
சபரிமலை ஐயப்பன் கோவிலில் 18 படிகள் ஏறி ஐயப்பனை தரிசனம் செய்வது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த 18 படிகளை ஏறி சென்றால், கொடி மரத்தை கடந்து சென்று, சுவாமி ஐயப்பனின் சன்னதியை அடைய முடியும். தங்க தகடுகளால் வேயப்பட்டு இந்த 18 படிகள் பாதுகாக்கப்படுகிறது.
இது தவிர மாதந்தோறும் சபரிமலை கோவில் நடைதிறக்கப்படும் போதும் இந்த படிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். சபரிமலையில் நடத்தப்படும் மிக காஸ்ட்லியான பூஜை இந்த படிபூஜை தான். 2036ம் ஆண்டு வரை படி பூஜை செய்வதற்கான புக்கிங் ஏற்கனவே நிறைவடைந்து விட்டது.

இந்த 18 படிகள் புனிதமானவை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த 18 படிகளுக்கு என்ன அர்த்தம்? இவைகள் எதை குறிக்கின்றன? இந்த 18 படிகள் உணர்த்தும் தத்துவம் என்ன என்பது பற்றி பலருக்கும் தெரியாது. வாங்க சபரிமலை 18 படிகளின் ரகசியத்தை தெரிந்து கொள்ளலாம்.
சபரிமலை 18 படி ரகசியங்கள் :
முதல் படி - மெய்
2ம் படி - வாய்
3 ம் படி - கண்
4 ம் படி - மூக்கு
5ம் படி - செவி
6ம் படி - காமம்
7ம் படி - குரோதம்
8ம் படி - மோஹம்
9ம் படி - மதம்
10ம் படி -மாச்சரியம்
11ம் படி - லோபம்
12ம் படி - டம்பம்
13ம் படி - அசூயை
14ம் படி - ஸத்வம்
15ம் படி - ராஜஸம்
16ம் படி - தாமஸம்
17 ம் படி - வித்யை
18ம் படி - அவித்யை
மனிதன் அடக்க வேண்டிய, வாழ்க்கையில் கடந்து வர வேண்டிய ஐம்புலன்கள், ஐம்பொறிகள், உணர்வுகள், 3 விதமான குணங்கள், ஞானம், அஞ்ஞானம் ஆகியவற்றையே இந்த 18 படிகள் குறிக்கின்றன. யார் ஒருவர் இந்த 18 விஷயங்களையும் கடந்து வருகிறாரோ அவர் வாழ்க்கையை உயர்ந்த நிலையை அடைவார். பரம்பொருளாகிய இறைவனை அடைய முடியும் என்ற வாழ்க்கை தத்துவமாகும். சுவாமியே சரணம் ஐயப்பா.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}