சிம்லா: முன்னாள் சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி பயணித்த கார், இமாச்சலப் பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகி சட்லெஜ் ஆற்றில் கவிழ்ந்து விட்டது. வெற்றியை தற்போது காணவில்லை. அவரைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி முன்னாள் மேயராக இருந்தவர் அதிமுகவைச் சேர்ந்தவர் சைதை துரைசாமி. அதிமுகவின் மிக முக்கியத் தலைவர்களில் இவரும் ஒருவர். இவரது மகன் வெற்றி துரைசாமி. இவர் இயக்குநராகவும் இருந்து வருகிறார். இவர் தனது நண்பர் கோபிநாத்துடன் இமாச்சலப் பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். இந்த நிலையில் அவர்கள் பயணித்த கார் விபத்துக்குள்ளாகி சட்லெஜ் ஆற்றில் விழுந்தது. இதில் காரை ஓட்டி வந்த டிரைவர் செந்தில் பலியானார். கோபிநாத் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் வெற்றியைக் காணவில்லை. அவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அவரை தேடும் பணிகள் தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளன.
வெற்றி துரைசாமி திரைப்பட இயக்குநராகவும் இருந்து வருகிறார். என்றாவது ஒரு நாள் என்ற படத்தை அவர் இயக்கியுள்ளார். அதில் விதார்த், ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பல்வேறு சர்வதேச பட விழாக்களில் அது விருது வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Short Story: "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?"
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
வழிகாட்டி தேவதை.. ஒரு நிமிடக் கதை (16)
கடைசி வரை மூக்கு கண்ணாடியே கிடையாது.. ஸ்ரீ உ.வே. குப்புசாமி அய்யங்கார்!
பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்.. குலச்சிறை நாயனார் !
தமிழுக்கு ஓர் இழப்பு!
ரீல்ஸ் மோகம்!
{{comments.comment}}