சென்னை: ஏ.ஆர். ரஹ்மான் உலகிலேயே மிகவும் சிறந்த மனிதர். எனக்கு நல்ல வாழ்க்கையைக் கொடுத்தவர். அவருக்கு எதிரான அனைத்து செய்திகளும் முட்டாள்தனமானவை, அவதூறானவை. அனைவரும் இப்படி எழுதுவதை, பேசுவதை நிறுத்த வேண்டும் என்று அவரது மனைவி சாய்ரா பானு கூறியுள்ளார்.
தனது கணவரிடமிருந்து பிரிவதாக அறிவித்துள்ளார் சாய்ரா பானு. இது ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதை விட கொடுமையாக ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து தேவையில்லாத வதந்திகளை பலர் பரப்பி வருகிறார்கள். குறிப்பாக சில யூடியூபர்கள் மிகவும் மோசமான முறையில் பேசி வருகிறார்கள்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஏ.ஆர்.ரஹ்மான், தன்னைப் பற்றி அவதூறு பேசி வரும் யூடியூபர்கள் உள்ளிட்டோருக்கு சட்டரீதியான நோட்டீஸ் அனுப்பி எச்சரித்துள்ளார். அவதூறு வீடியோக்கள், செய்திகளை நீக்காவிட்டால் வழக்குத் தொடரப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்த நிலையில் சாய்ரா பானு ஒரு ஆடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் தற்போது மும்பையில் இருக்கிறேன். கடந்த 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வருகிறேன். அனைத்து யூடியூபர்கள், தமிழ் ஊடகங்களுக்கு நான் விடுக்கும் கோரிக்கை என்னவென்றால் அவருக்கு எதிராக அவதூறு பரப்பாதீர்கள். அவர் உலகிலேயே மிகவும் சிறந்த மனிதர். எனது உடல் நலத்தால்தான் நான் சென்னையில் இருக்க முடியவில்லை. சிகிச்சைக்காக மும்பை வந்துள்ளேன். அவர் இசைப் பணியில் பிசியாக உள்ளதால் அவரை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. எனது பிள்ளைகளையும் தொல்லை செய்ய விரும்பாமல்தான் பிரிய முடிவு செய்தேன்.
அவர் மிக மிக நல்லவர். அவரை நான் நம்புகிறேன். அவர் எனக்கு சிறந்த வாழ்க்கையைக் கொடுத்துள்ளார். கடவுள் அவரை ஆசிர்வதிக்கட்டும். எங்களுடைய பிரைவசியில் தலையிடாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். இன்னும் எதுவும் அதிகாரப்பூர்வமாக முடிவு செய்யப்படவில்லை. எனது சிகிச்சை முடிந்ததும் விரைவில் நான் சென்னை திரும்புவேன். அவரது பெயரைக் கெடுக்கும் வகையில் யாரும் செயல்பட வேண்டாம். அவரைப் பற்றி வெளியான செய்திகள் அனைத்தும் அவதூறானவை, தவறானவை என்று கூறியுள்ளார் சாய்ரா பானு.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மாசமோ மார்கழி மாசம்.. வாசலில் கலர் கலர் கோலம்.. தினம் ஒரு கோலம்!
தொந்தி மாமா வந்தாராம்.. தொப்பியை தலையில் போட்டாராம்!
மாதங்களில் மார்கழி.. Ode to the Auspicious Marghazi Month!
திருவள்ளூரில் அரசு பள்ளி சுவர் இடிந்து 7ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
தேடல்!
தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
Sai Jadhav.. 4வது தலைமுறையாக ராணுவ உடை அணியும் பெண்.. தொடரும் இந்திய பெண்களின் சாதனை!
100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம்... டிசம்பர் 18ம் தேதி காங்கிரஸ் போராட்டம்: செல்வப்பெருந்தகை
மார்கழி திங்கள் பிறந்ததம்மா!
{{comments.comment}}