பான் இந்தியாவில் கலக்கும்.. தமிழில் அரை டஜன் படங்களில் கமிட்டான.. பிக் பாஸ் பிரபலம்!

Nov 14, 2023,04:47 PM IST
- மஞ்சுளா தேவி

சென்னை: தமிழில் அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளதால் பிக் பாஸ் பிரபலம் சாக்ஷி அகர்வாலுக்கு இந்த தீபாவளி பான் இந்தியா தீபாவளியாக அமைந்துள்ளது.

விஜய் டிவியில் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோ மூலம் பிக்பாஸ் 3யில் கலந்து கொண்டு  பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். அதற்கு முன்பே இவர் இன்ஸ்டாகிராமை சூடு பறக்க பரபரக்க வைத்துக் கொண்டிருந்தார். இவரது கவர்ச்சிகரமான போட்டோக்களுக்கு இன்று வரை தனி ரசிகர் பட்டாளமே உண்டு. எப்படித்தான் இப்படி டிசைன் டிசைனாக போஸ் கொடுக்கிறாரோ என்று ஆச்சரியப்படும் அளவுக்கு இவரது போஸ்கள் இருக்கும்.

தமிழில் காலா, விசுவாசம், ராஜா ராணி, போன்ற திரைப்படங்களில் சிறிய ரோல்களில் நடித்துள்ளார். சாக்ஷி அகர்வால் பிக் பாஸில் கலந்து கொண்ட பிறகுதான் பட வாய்ப்புகள் அதிகம் வர தொடங்கியது. இவர் சமூக வலைத்தளங்களில் எப்பவுமே ஆக்டிவாக இருந்து வருபவர். அவ்வப்போது இவர் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்கள் மனதை வென்றுள்ளார்.



மலையாளத்தில் சாக்ஷி அகர்வால்

தற்போது தமிழ் திரையுரையில் நாயகியாக வித்தியாசமான கதாபாத்திரங்களின் மூலமும் அனைவரின் மனதையும் கவர்ந்து வருகிறார். ஆக்சன், வில்லி, கிளாமர், கிராமத்து பெண் என வித்தியாசமான கதாபாத்திரங்களில் தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தி அசத்தி வருகிறார். தமிழ் மட்டுமல்லாது கன்னடம் ,மலையாளம், போன்ற மொழிகளிலும் நாயகியாக நடித்து வலம் வருபவர்.

தமிழில் அரை டஜன் படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் மலையாளத்தில் மம்முட்டியின் தங்கை மகன் நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க இருக்கிறார்.இதில் கிராமத்து பெண்ணாகவும் நடிக்கிறார். மேலும் கன்னடத்தில் முன்னணி இசையமைப்பாளரான பி. அஜெனீஸ் லோக்நாத் தயாரிக்கும் புதிய படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்.

பாலிவுட்டிலும் சாக்ஷி அகர்வாலுக்கு அழைப்பு




தற்போது தமிழில் பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு இயக்குனர் ரஜித் கண்ணா, சாரா என்ற படத்தை இயக்குகிறார். திரில்லராக உருவாகும் இப்படத்திலும் நடித்து வருகிறார். மேலும் எட்டு தோட்டாக்கள் என்ற படத்தில் நடித்த புகழ் வெற்றியுடன் ஒரு படத்தில் ஜோடியாக நடித்து முடித்துள்ளார். அத்துடன் கெஸ்ட் 2 உட்பட ஆறு படங்களில் நடித்து வருகிறார்.

தமிழ் திரையுலகில் கலக்கி வரும் சாக்ஷி அகர்வாலுக்கு தென்னிந்தியா சினிமாவை தொடர்ந்து பாலிவுட்டிலும் அழைப்புகள் பல தொடங்கியுள்ளன. கூடிய சீக்கிரம் சாக்ஷி அகர்வாலை பாலிவுட்  படத்திலும் காணலாம் .இதனால் இந்த தீபாவளி நடிகை சாக்ஷி அகர்வாலுக்கு மிகப் பெரும் கொண்டாட்டமாக அமைந்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... இன்று திடீர் குறைவு... எவ்வளவு தெரியுமா?

news

வாழப்பாடி வெள்ளாள குண்டம் ராஜலிங்கேஸ்வர் சிவன் கோவில் நந்தியைப் பார்த்திருக்கீர்களா?

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

news

ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கப் போகிறீர்களா.. கமல்ஹாசனே சொன்ன ஹேப்பி நியூஸ்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 08, 2025... நல்ல காலம் பிறக்குது

அதிகம் பார்க்கும் செய்திகள்