சாம்சங் நிறுவனத்தில் மீண்டும் சர்ச்சை,3 தொழிலாளர்கள் சஸ்பெண்ட்..தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

Feb 05, 2025,06:08 PM IST

காஞ்சிபுரம்: சாங்சங் நிறுவன தொழிற்சங்கத்திலிருந்து விலகுமாறு கட்டாயப்படுத்தி 400 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களிடடம் கையெழுத்து வாங்கியதாக நிர்வாகத்தின் மீது தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து சாம்சங் தொழிலாளர்கள் தற்போது உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் பகுதியில் தென்கொரியா நாட்டைச் சேர்ந்த சாம்சங் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதில் 1500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் என்ற பெயரில் தொழிற்சங்கத்தை பதிவு செய்ய வேண்டும், உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த செப்.9ம் தேதி முதல் சுமார் 35 நாட்கள் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சமரச பேச்சு வார்த்தை நடைபெற்ற நிலையில், பேச்சு வார்த்தை தோல்வியை சந்தித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட  தொழிலாளர்களை வீடு வீடாக சென்று போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.




போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், அமைச்சர்கள் எ.வ.வேலு, டி.ஆர்.பி ராஜா உள்ளிட்டோர் தொடர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தொழிலாளர்கள் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளும் சாம்சங் நிறுவனம் ஏற்றுக் கொண்டதாக பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதனையடுத்து  சமீபத்தில் தொழிற்சங்க அனுமதியை தமிழ்நாடு அரசு அளித்திருந்தது. முறைப்படி சங்கமும் பதிவு செய்யப்பட்டது.


இந்த நிலையில் தொழிற்சங்கத்தில் இருந்து கட்டாயப்படுத்தி தொழிலாளர்களை வாபஸ் பெற வைப்பதாக சாம்சங் நிறுவனத்தின் மீது புகார் எழுந்துள்ளது. மேலும் தொழிற்சங்கம் அமைக்கப் போராடிய ஊழியர்களில் 3 பேரை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. இதையடுத்து இந்த செயல்களைக் கண்டித்து 400க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விடிஞ்சா தீபாவளி.. அலை அலையாக சொந்த ஊர்களில் குவிந்த மக்கள்.. வெறிச்சோடியது சென்னை

news

ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்... சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை மையம்

news

ஜிஎஸ்டி வரி குறைப்பால் கார், ஏரி, டிவி விற்பனை அதிகரிப்பு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

news

கரூர் துயரம் எதிரொலி.. தீபாவளி கொண்டாட வேண்டாம்.. தொண்டர்களுக்கு தவெக வேண்டுகோள்

news

எனது பெயரில் நற்பணி மன்றம் தொடங்க வேண்டாம்.. விட்ருங்க.. அண்ணாமலை கோரிக்கை

news

திமுக அரசுக்கு நிதி நிர்வாகமே தெரியவில்லை..பாமக கூறி வந்த குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளது: அன்புமணி

news

10 கிராம் தங்கத்தோட விலை என்ன தெரியுமா.. தீபாவளியையொட்டி வச்சு செய்யும் நகை விலை!

news

நிதீஷ் குமார் நிச்சயம் முதல்வராக மாட்டார்.. பாஜக முடிவெடுத்து விட்டது.. சொல்கிறது காங்கிரஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்