சென்னை: சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் சர்ச்சைக்குரிய வகையில் இடம் பெற்ற kissa47 பாடல் நீக்கம் செய்யபட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.
டிடி ரிட்டன்ஸ் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சந்தானம் நடிப்பில் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். படத்துக்கு ஆஃப்ரோ இசையமைத்துள்ளார். இப்படத்தில் நடிகர் சந்தானத்துடன் இணைந்து, கஸ்தூரி, கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இதில் சந்தானம் சினிமாக்களை விமர்சனம் செய்யும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஹாரர் மற்றும் காமெடி கலந்து உருவாகியுள்ள இப்படத்தின் kissa 47 பாடல் சமீபத்தில் வெளியானது. நகைச்சுவை கலந்து தயாராகியுள்ள இப்பாடல் யூட்யூபில் 93 லட்சத்திற்கும் அதிகமான வீவர்ஸ்களை பெற்றுள்ளது.

கோடை விடுமுறையை முன்னிட்டு,டிடி நெக்ஸ்ட் லெவல் படம் 16ஆம் தேதி வெளியிட பட குழு திட்டமிட்டு இருந்தது. ஆனால் ரிலீசுக்கு சிக்கல் எழுந்தது. ஏனெனில், சமீபத்தில் வெளியான kissa 47 பாடலில் பெருமாளை அவமதிக்கும் விதமாக கோவிந்தா கோவிந்தா என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளதாகவும், இதனால் இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் நடிகர் சந்தானம் மீது சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக வழக்கறிஞர்கள் புகார் அளித்தனர்.
அதே சமயத்தில் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய பாடலை நீக்க கோரியும், 100 கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கேட்டும் நடிகர் சந்தானம் மற்றும் பட தயாரிப்பு நிறுவனத்தின் மீது திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரும், பாஜக மாநில செய்தி தொடர்பாளருமான பிரகாஷ் ரெட்டி நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இந்த நிலையில் டிடி நெக்லஸ் லெவல் படம் நாளை வெளியாக உள்ள நிலையில், டிடி நெக்ஸ்ட் படத்தின் kissa 47 பாடல் தற்போது படத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பட குழு தகவல் வெளியிட்டுள்ளது.
2026 தேர்தலிலும் திமுக.,வுக்கு தான் வெற்றி...முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
ஒரே நாளில் 30,000 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய அமேசான்
தங்கம் நேற்றைய விலையை தொடர்ந்து இன்றும் குறைவு... அதுவும் சவரனுக்கு ரூ. 1,200 குறைவு!
தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் கமிஷன்...இன்று முதல் பயிற்சி ஆரம்பம்
மக்களே உஷார்...இன்று இரவு கரையை கடக்கிறது மோன்தா புயல்
திருச்செந்தூரில் நடைபெறும் சாயா அபிஷேகம் பற்றி தெரியுமா?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 28, 2025... இன்று வெற்றிகள் தேடி வரும் ராசிகள்
தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் SIR... நவ 2ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நெருங்கும் மோன்தா புயல்.. தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை!
{{comments.comment}}