- செ. சாந்தி சின்னத்தம்பி, மதுரை
சின்னஞ்சிறு விழியாலே
சிக்கல்களைத் தீர்த்தவளே!
கொஞ்சுகின்ற மொழியாலே
உளமதில் உவகை சேர்த்தவளே !
தஞ்சமென மடியில் வந்தமர்ந்து
தாலாட்டு இசைக்கும் தாயானவளே!
விஞ்சுகின்ற அபிநயங்களால்
வித்தைகள் காட்டுபவளே !
தளிர்க்கையால் தலைநீவிப்
பண்பாடும் சேயானவளே !
அல்லலுறும் வேளையிலே
ஆறுதலாய் இருப்பவளே!

அழகிய செவ்விதழால்
ரோஜாவாய்ச் சிரிப்பவளே!
புதிரான வாழ்வினிலே
புதுமைப் பூக்கச் செய்த புது மலரே!
எப்பிறப்பும் என் அருகே வேண்டுமடி நீ எனக்கு
ஏழிசை ராகமும் என்னுள்ளே நான் இசைக்க
பொக்கிஷமாய்க் கிடைத்த வீணையடி நீ எனக்கு !
(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர்(ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4. சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)
சொல்லாத சந்தோஷம் சொல்லாமல் அள்ளுது.. பள்ளிக்கூடம் வந்தாலே சந்தோஷம் பொங்குது!
Assembly By Election: நாளை மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: அனைத்து ஏற்பாடுகளும் தயார்
சென்னை பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலக வழக்கு: வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு வாபஸ்
தென்தமிழ் தலையங்கம்: Celluloid World to St Geroge Fort..கோட்டையைப் பிடிக்கத் துடிக்கும் கோடம்பாக்கம்
குலுக்கி சர்பத்: தூக்கிப் போட்டு குலுக்கி எடுத்து கிளாஸில் ஊற்றிக் குடிச்சா.. ஆஹா என்ன சுகம்!
தலைமை தேர்தல் ஆணையர் விவகாரம்: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
2026-ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு: 3 விஞ்ஞானிகளுக்கு விருது!
Evening Snacks Time: டேஸ்ட்டியான சேமியா பால் பாயாசம் செய்து சாப்பிடலாமா?
சென்னையில் புறநகர் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து: ரயில் சேவைகள் பாதிப்பு!
{{comments.comment}}