ராதிகா தேர்தலில் ஜெயிக்கணும்.. விருதுநகர் கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்த சரத்குமார்

Jun 03, 2024,01:43 PM IST

விருதுநகர்: மக்களவை தேர்தலில் போட்டியிட்ட தனது மனைவி ராதிகா வெற்றி பெற வேண்டும் என்று நடிகர் சரத்குமார் அங்கப்பிரதட்சணம் செய்துள்ளார்.


2024ம் ஆண்டிற்கான மக்களவைத்தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. இந்தியாவில் உள்ள 543 தொகுதிக்கும் கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கிய வாக்குப்பதிவு கடந்த 1ம் தேதி வரை நடைபெற்றது. இதல் தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது.  இந்த தேர்தலில் பதிவான வாக்குகள்  நாளை  எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 




நாடாளுமன்ற  தேர்தலில் விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகா பாஜக கட்சி சார்பில் போட்டியிட்டார். தேர்தலுக்கு முன்னர் ராதிகாவின் கணவரான சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராக இருந்தார். அந்த கட்சியை பாஜகவுடன் இணைந்த பின்னர் தான் ராதிகா இந்ததேர்தலில் போட்டியிட்டார். இருப்பினும் ராதிகாவிற்கு பாஜக ஒதுக்கிய அதே தொகுதியில் மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் போட்டியிடுகிறார். அது மட்டும் இன்றி ஏற்கனவே சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருக்கும் மாணிக்க தாகூரும் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.


கடுமையான மும்முனை போட்டி நிகழும் விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகா வெற்றி பெற வேண்டும் என்று சரத்குமார் விருதுநகரில் உள்ள ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்தார். ராதிகாவும் உடன் இருந்தார். சரத்குமார் அங்கப்பிரதட்சணம் செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் பரவி வைரலாகி வருகின்றன. இந்நிலையில், வெற்றி யாருக்கு என்பது நாளை தெரிந்துவிடும் என தொண்டர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்