சென்னை: பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்தபோது சசிகலாவும், முன்னாள் முதலவர் ஓ.பன்னீர் செல்வமும் திடீர் என சந்தித்து பேசிக் கொண்டனர். இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்து சில நிமிடம் பேசிக் கொண்டனர்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், திமுக நிறுவனத் தலைவருமான அண்ணாவின் நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் திமுக கட்சியினர், அதிமுக கட்சியினர், பிற கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். திமுகவினர் அண்ணா நினைவிடத்திற்கு அமைதி பேரணி நடத்தி வந்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அண்ணாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சசிகலா மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிோயரும் வந்தனர். இருவரும் ஒரே நேரத்தில் அங்கு இருந்ததால், நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். காரில் வந்த சசிகலாவை நோக்கிச் சென்ற ஓ.பன்னீர் செல்வம் அவரிடம் வணக்கம் கூறி பேசினார்.
இதையடுத்து காரை விட்டு இறங்கிய சசிகலா, ஓ.பி.எஸ்ஸிடம் சிறிது நேரம் பேசி விட்டு பின்னர் காரில் ஏறிச் சென்றார். கருப்பு நிற சேலையில் வந்திருந்தார் சசிகலா. பல வருடங்களுக்கு பிறகு இருவரும் நேருக்கு நேர் சந்தித்துப் பேசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு ஜெயலலிதா நினைவு நாளில் இருவரும் ஒரே நேரத்தில் அஞ்சலி செலுத்த வந்த போது ஒருவரை ஒருவர் சந்திக்கவிலை என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில்தான் பிரிந்து கிடக்கும் அதிமுக ஒன்று சேரும். அனைவரும் இணைவோம். ஓ.பி.எஸ்ஸுடன் இணைந்து செயல்படுவேன் என்று கூறியிருந்தார் சசிகலா என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் இன்று நடந்த சந்திப்பு இரு தரப்பினரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.
விஜய் கட்சிக்கு சசிகலா வாழ்த்து
இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் சசிகலா பேசுகையில், நான் அனைவரையும் அதிமுகவைச் சேர்ந்தவர்களாக தான் ஆரம்பத்தில் இருந்து நினைத்து கொண்டிருக்கின்றேன். தமிழக மக்கள் எங்கள் பக்கம் தான். நாங்கள் எப்போதும் மக்களை நம்பி இருப்பவர்கள்.
ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். நடிகர் விஜய் கட்சி தொடங்கியது வரவேற்கத்தக்கது என்றார்.
விடிஞ்சா தீபாவளி.. அலை அலையாக சொந்த ஊர்களில் குவிந்த மக்கள்.. வெறிச்சோடியது சென்னை
தீபாவளி ஸ்வீட்ஸ் மட்டும் போதுமா.. சூடான மொறுமொறு ஓமம் பக்கோடா செய்யலாமா!
தீபாவளி என்ற பெயர் வந்தது எப்படி.. பாதுகாப்பாக எப்படிக் கொண்டாடலாம்?
தீபாவளி தீபாவளி.. சூப்பரா காஜு கத்திலி செய்வோம்.. ஸ்வீட்டா பண்டிகையை கொண்டாடுவோம்
ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்... சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை மையம்
ஜிஎஸ்டி வரி குறைப்பால் கார், ஏரி, டிவி விற்பனை அதிகரிப்பு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
கரூர் துயரம் எதிரொலி.. தீபாவளி கொண்டாட வேண்டாம்.. தொண்டர்களுக்கு தவெக வேண்டுகோள்
எனது பெயரில் நற்பணி மன்றம் தொடங்க வேண்டாம்.. விட்ருங்க.. அண்ணாமலை கோரிக்கை
{{comments.comment}}