சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலி: 4 லட்சம் நிவாரணம் அறிவித்த தமிழக அரசு

Jan 04, 2025,07:14 PM IST

விருதுநகர்: சாத்தூர் அருகில்  பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.


விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள அப்பைநாயக்கன்பட்டி பகுதியில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் 100க்கும் அதிகமானோர் பணி புரிந்து வருகின்றனர்.இந்த பட்டாசு ஆலையில் 4 அறைகளில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இன்று தொழிலாளர்கள் வழக்கம் போல் பணி செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென வெடி விபத்து எற்பட்டது. இந்த விபத்தில் 4 அறைகளும் இடிந்து தரைமட்டமாகின. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பலியாகினர்.




இந்த விபத்து குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆலை உரிமையாளர் பாலாஜி, சசிபாலன், மேலாளர் தாஸ், பிரகாஷ் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டிட இடிபாடுகளில் மேலும் சிலர் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.


இந்த பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கும் தலா 4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முகமது சுதீனுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் தலா ஒரு லட்சம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவராத்திரி வந்தாச்சு.. விதம் விதமாக கொலு வச்சுக் கொண்டாடத் தயாரா மக்களே?

news

பஞ்சர் தாத்தா.. இளநீர் தாத்தா.. கூழ் பாட்டி மற்றும் தேன் வாழைப்பழம்!

news

Purattasi Special Dish: வெண்டைக்காய் சாம்பார் செய்வது எப்படி?

news

தமிழகத்தில் தொடரும் மழை: 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

news

டெல்லியில் உச்ச கட்ட பதற்றம்: கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, நேஹா போரா கைது!

news

டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் பிரதமருக்கு எதிராக தீவிரமடையும் போராட்டம்

news

மாமன் காரன் பெத்த புள்ளே மனசைத் தொறந்து பேசும் புள்ளே!

news

மன்னித்து அருளக் கூடியவர் அன்னூர் மன்னீஸ்வரர்!

news

அரட்டை அரங்கம் விசு.. மறக்க முடியாத மீனாட்சிசுந்தரம் ராமஸ்வாமி விஸ்வநாதன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்