கொல்கத்தா மருத்துவர்கள் உடனடியாக.. பணிக்கு திரும்ப வேண்டும்.. சுப்ரீம் கோர்ட் மீண்டும் உத்தரவு!

Aug 22, 2024,02:31 PM IST

கொல்கத்தா:   கொல்கத்தாவில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் போராட்டத்தை கைவிடும் படி அறிவித்தும் பணிக்கு திரும்பாமல் மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்பும்படி சுப்ரீம் கோர்ட் இன்று மீண்டும் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது.


டாக்டர்கள் போராட்டத்தால் நாட்டில் பதட்ட நிலை நிலவுவதையும், மக்கள் பாதிக்கப்படுவதையும் அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.


கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் கடந்த வாரம் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி மிகக் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து கொல்கத்தாவில் தொடர் போராட்டம் நடைபெற்றது. இப் போராட்டம் கலவரமாகவும் மாறியது. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டு நாடு தழுவிய போராட்டம் நடைபெற்று வந்தது.




இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தாமாக  முன் வந்து வழக்கு பதிவு செய்தது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா  ஆகியோர் அமர்வில் கடந்த 21ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு பணியை தொடர வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், புகைப்படங்கள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் அதிக அளவில் பரவி உள்ளது. இதுதான் உயிரிழந்த பெண்ணுக்கு கொடுக்கும் மரியாதையா?. 


டாக்டர்கள் பாதிக்கப்படுவது தொடர்கதையாகவே இருந்து வருகிறது. ஏன் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை?. நடவடிக்கை எடுக்க இது போன்ற சம்பவம் மீண்டும் அரங்கேறும் வரை காத்திருக்க முடியாது. மேற்குவங்க அரசால் ஏன் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியாமல் போனது?. இது கொல்கத்தா மருத்துவமனை பிரச்சனை மட்டுமே அல்ல. ஒட்டுமொத்த மருத்துவர்களின் பிரச்சனை. இந்த வழக்கு தொடர்பான நிலையை அறிக்கையாக சிபிஐ சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.


ஆனால் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தும் மருத்துவர்கள் பணிக்கு திரும்பாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என உச்ச நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டது. போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள் பணிக்கு திரும்பாமல் இருந்தால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். பணிக்கு திருப்பும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!

news

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

news

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்