டெல்லி: தமிழ்நாடு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோவில் கூறப்பட்டுள்ளது குறித்து விசாரிக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்து விட்டது. மனுதாரருக்கும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கடும் கண்டனம் தெரிவித்தார்.
சென்னையைச் சேர்ந்த பிரானேஷ் ராஜமாணிக்கம் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஒரு ஆடியோ வெளியானது. அதில் முதல்வர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்து சம்பாதித்துள்ளதாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான் முதன்மை அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவைப் பார்த்த தலைமை நீதிபதி காட்டமான பல கேள்விகளைக் கேட்டார். இது பார்த்தாலே தெரிகிறது bogus பெட்டிஷன் என்று. முதல்வர் குடும்பத்தைப் பற்றி ஒரு ஆடியோ வெளியாகியுள்ளது. அதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை. அந்த ஆடியோ உண்மையானதா என்றும் தெரியவில்லை. ஆனால் அதில் கூறியுள்ளது குறித்து விசாரிக்கக் கோரியுள்ளீர்கள்.
யாரோ வெளியிட்டுள்ளார்கள். அதை வைத்துக் கொண்டு அதில் உள்ளதைப் பற்றி விசாரிக்கக் கேட்கிறீர்கள்..
யார் நீங்க.. என்று காட்டமாக கேட்டார் தலைமை நீதிபதி.
அதற்கு பதிலளித்த மனுதாரரின் வழக்கறிஞர், நிதியமைச்சர் மாற்றப்பட்டு விட்டார் என்று கூறினார். அதைக் கேட்ட தலைமை நீதிபதி, துறையைத்தானே மாற்றினார்கள்.. என்று பதிலடி கொடுத்தார். பின்னர் தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி, உச்சநீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க அனுமதிக்க முடியாது. மனு டிஸ்மிஸ் செய்யப்படுகிறது என்று கூறி மனுவை விசாரணைக்கு ஏற்காமலேயே தள்ளுபடி செய்து விட்டார்.
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}