பூரி: ஒடிசாவில் அதிகரித்து வரும் வெப்ப அலையை சமாளிப்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி வேலை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பொதுவாக ஒவ்வொரு வருடமும் ஏப்ரல், மே காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் மார்ச் 20 முதல் ஏப்ரல் 15க்குள்ளாக ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்தப்படும். இதனைத் தொடர்ந்து மே மாதம் கோடைகால விடுமுறை விடப்படுவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது நாடு முழுவதும் ஆண்டு இறுதித் தேர்வை நோக்கி பள்ளிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. மாணவ மாணவியர்களும் தேர்வை எதிர்நோக்கி தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில் மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே வெப்ப நிலை அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட வட மாநிலங்களில் வெப்ப அலை மிக மோசமாக நிலவி வருகிறது. மதிய வேலைகளில் வெயிலின் தாக்கம் கடுமையாக காணப்படுகிறது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அதே சமயத்தில் 10 ,11,12 ஆகிய மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெறுவதால் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு காலை, மதியம் என மாறி மாறி பள்ளி வேலை நாட்கள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மாணவர்கள் மதிய வேலைகளில் வெயில் செல்வது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிசாவில் அதிகரித்து வரும் வெப்ப அலையை கருத்தில் கொண்டு, பள்ளி வேலை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அம் மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 6:30 மணி முதல் 10:30 மணி வரை வகுப்புகள் நடைபெறும். அங்கன்வாடி மையங்கள் காலை ஏழு முதல் ஒன்பது மணி வரை மட்டுமே இயங்கும் என அறிவித்துள்ளது.
இந்த நடைமுறை உடனடியாக அமல்படுத்தப்படும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
World Daughters Day: இரவில் நீலாம்பரியாய் தாயாகி தாலாட்டுபவள் அவள்!!
சர்வதேச மகள்கள் தினம்.. மகாலட்சுமியின் ரூபமே பெண் குழந்தைகள்!
மகள் இல்லாக் குறையைப் போக்க வந்த மருமகள்!
தென்தமிழ் தலையங்கம்: சுற்றுலா.. மனிதத்தையும் தேசத்தையும் இணைக்கும் பாலம்!
மகாளயபட்சம்.. முன்னோர்களுக்குத் தர்ப்பணம், அன்னதானம் செய்வது சிறப்பு!
முதல்வர் ரிவ்யூ கூட்டம் நடத்தவில்லை; Reels தான் எடுத்துள்ளார்! - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி மற்றும் கணவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு
மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை
தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?
{{comments.comment}}