உலகிலேயே மிகப் பழமையான மனித ஜீன்.. தெற்கு ஸ்பெயினில் கண்டுபிடிப்பு!

Mar 04, 2023,09:13 AM IST
பெர்லின்: உலகிலேயே மிகப் பழமையான மனித ஜீன் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.



23,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதன் ஜீன் கட்டமைப்புதான் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த மனிதன் வாழ்ந்த இடம், கடைசி ஐஸ் காலத்தின் உச்ச காலகட்டத்தில் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இப்பகுதி அப்போது ஐரோப்பிவிலேயே சற்று வெப்பமான பகுதியாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.



தெற்கு ஸ்பெயினில் உள்ள குவேவா டெல் மலமுஸெர்சோ என்ற இடத்தில்தான் இந்த ஜீனோம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  ஸ்பெயினின் குவேவா டி ஆர்டெலஸ் பகுதியில் 7000 முதல் 5000 ஆண்டுகள் பழையான ஜீன்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட ஜீன் அமைப்புதான் உலகிலேயே மிகப் பழமையான ஜீன் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

தெற்கு ஸ்பெயினின் அன்டலுசியா பகுதியில் பல்வேறு நாட்டு ஆய்வுக் குழுவினர் பல்வேறு வகையான மனித ஜீன்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் பகுதியில் கிடைத்துள்ள ஜீன்களின் டிஎன்ஏ குறித்த ஆய்வுகளும் தொடர்ந்து கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்