சாதிய ஏற்றத் தாழ்வுகளை நொறுக்குகிற வலிமைமிக்க சம்மட்டி.. அண்ணல் அம்பேத்கர்.. சீமான்

Dec 06, 2024,03:04 PM IST

சென்னை: இன்றளவும் தொடரும் சாதிய ஏற்றத் தாழ்வுகளை நொறுக்குகிற வலிமைமிக்க சம்மட்டியாக அண்ணல் அம்பேத்கர் திகழ்கிறார் என்று தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.


1891ம் ஆண்டு ஏப்ரல் 14ல்  அம்பேத்கர் பிறந்தார். சட்ட மேதை, பொருளாதார நிபுணர், அரசியல் தலைவர், சமூக சீர்திருத்தவாதி என பன்முகத்தன்மை கொண்டவர் அம்பேத்கர். பட்டியல் சமூகத்தில் பிறந்தவரான அம்பேத்கர் பின்னர் புத்த மதத்தைத் தழுவினார். இந்தியாவின் அரசியல் சாசனத்தை வகுத்தவர் அம்பேத்கர். 1956ம் ஆண்டு டிசம்பர் ம் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் அம்பேத்கர் மறைந்தார். 




அம்பேத்கர் மறைந்த நாளான இன்று  நாடு முழுவதும் அவருக்கு தலைவர்கள், மக்கள் புகழாஞ்சலி செலுத்தி வருகின்றனர். அம்பேத்கரின் படம் மற்றும் சிலைக்கு பிரதமர் மற்றும் அரசியல் கட்சி முக்கிய தலைவர்கள் மாலை அணிந்து மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். அம்பேத்கர் நினைவு நாளையொட்டி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உறுதிமொழி ஒன்றை வெளியிட்டுள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் நாம் அடிமையாய் வாழ்வதைவிட சுதந்திரமாய் ஓர் நொடி வாழ்ந்து சாவது மேலானது! என்று கற்பித்த புரட்சியாளர்!


அறிவைத் தேடி ஓடுங்கள்! நாளைய வரலாறு உங்களைத் தேடி ஓடிவரும்! என்ற பேரறிஞர்!


இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த சட்டமேதை!


நான் யாருக்கும் அடிமை இல்லை; எனக்கும் யாரும் அடிமையில்லை! என்று முழங்கிய சமத்துவ நாயகன்!


சாதியக் கொடுமைகளை எதிர்த்து போராடாமல் இருப்பதைவிட செத்து ஒழிவதே மேலானது! என்ற புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் இன்றைய காலத்தேவை மட்டுமல்ல; என்றைக்குமான காலத்தேவை!


இன்றளவும் தொடரும் சாதிய ஏற்றத் தாழ்வுகளை நொறுக்குகிற வலிமைமிக்க சம்மட்டியாக அண்ணல் அம்பேத்கர் திகழ்கிறார்.


பன்னெடுங்காலமாக அடிமைப்பட்டு தாழ்தளத்தில் வீழ்ந்துகிடக்குற தமிழ்தேசிய இனப் பிள்ளைகள் உலகங்கெங்கும் மானுட விடுதலைக்குப் போராடிய புரட்சியாளர்களின் வழியிலே எம்மின விடுதலைக்கான அரசியல் புரட்சியை முன்னெடுக்கிறோம்.


சாதி-மதப் பிளவுகள்தான் சமநிலைச் சமூகம் அமையவிடாது ஒவ்வொரு தேசிய இனத்திற்குள்ளும் தன்னினப்பகையை மூட்டி அந்த தேசிய இனங்களைப் பிரித்தாண்டு வீழ்த்திக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்த தமிழ்த்தேசிய இனப் பிள்ளைகள் அண்ணல் அம்பேத்கரின் வழியிலே பயணித்து, தமிழ்தேசிய இன மக்களின் உரிமைகளை மீட்டெடுப்போம் என அவரது நினைவுநாளில் உறுதியேற்போம்! என்று தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

2025ல் இந்தியர்கள் கூகுளில் எதை அதிகமாக தேடியிருக்கிறார்கள் பாருங்களேன்!

news

2025ம் ஆண்டில் ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டிய தங்கத்தின் 'மின்னல்' பயணம்

news

சான்டாவுக்கே கிப்ட் கொடுத்த அந்த மொமன்ட்.. A Gift To Santa!

news

2025ல்.. மாருதி காரை பின்னுக்குத் தள்ளி மிரட்டிய.. டாடா நெக்ஸான்!

news

அதிரும் வங்கதேச அரசியல்.. போராட்டம் எதிரொலி.. உள்துறை சிறப்பு உதவியாளர் ராஜினாமா!

news

அதிமுக கூடாரத்தில் சலசலப்பு: தவெக-வில் இணையப்போகும் முக்கிய புள்ளிகள்? செங்கோட்டையன் சூசகம்!

news

தலைநகரில் கிறிஸ்து பிறப்பு விழா: டெல்லி தேவாலயத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு!

news

மறைவேடங்கள் நிறைந்த இவ்வுலகில்.. In the world of disguise

news

அன்புக்குரிய சான்டா.. Santa, the classy lovable one!

அதிகம் பார்க்கும் செய்திகள்