அதிர வைக்கும் அஸ்மிதா படேல்.. ரூ. 53 கோடியை திருப்பிச் செலுத்தணும்.. செபி போட்ட உத்தரவு!

Feb 09, 2025,01:52 PM IST

மும்பை: அஸ்மிதா படேல் என்பவருக்கும், அவரது நிறுவனத்துக்கும் இந்தியாவின் செபி கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அஸ்மிதா படேலும் அவரது நிறுவனமும் வசூலித்த ரூ. 53 கோடியை உடனடியாக திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் செபி உத்தரவிட்டுள்ளது.


யார் இந்த அஸ்மிதா படேல்?


இவரது முழுப் பெயர் அஸ்மிதா ஜிதேஷ் படேல். குஜராத்தைச் சேர்ந்த  பெண்மணி. கடந்த 17 வருடமாக நிதித்துறையில் பல்வேறு வர்த்தகங்களில் ஈடுபட்டுள்ளார். வர்த்தக பாடம் எடுக்கும் ஆசிரியையாகவும் இருந்துள்ளார். நிதிக் கல்வியில் சிறந்து விளங்கியமைக்காக பல விருதுகளையும் இவர் பெற்றுள்ளாராம்.


அஸ்மிதா படேல் குளோபல்  வர்த்தகப் பள்ளி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதன் இயக்குநராகவும் இருக்கிறார். நவி மும்பையில் இதன் தலைமை அலுவலகம் உள்ளது. தனக்குத் தானே She Wolf of the Stock Market மற்றும் Options Queen என்று பட்டம் சூட்டிக் கொண்டவர் அஸ்மிதா படேல். தனக்கு உலகம் முழுவதும் ஒரு லட்சம் மாணவர்கள் இருப்பதாகவும் கூறுகிறார்.




asmitapatel.com என்ற தனது இணையதளம் மூலமாக நிதி இன்ப்ளூயன்ஸராக பலருக்கும் யோசனைகள், புரமோஷன்கள், ஆலோசனைகள், உதவிகள் வழங்கி வருகிறார். சமூக வலைதளங்களிலும் இவர் பிரபலமாக இருக்கிறார். யூடியூபில் மட்டும் 5.26 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். இன்ஸ்டாகிராமில் 2.9 லட்சம் பாலோயர்கள் உள்ளனராம். பேஸ்புக்கில் 73,000 பாலோயர்கள் உள்ளனர். லிங்க்ட்இன்னில் 1900 பாலோயர்கள் உள்ளனர். எக்ஸ் தளத்தில் 4200 பாலோயர்கள் இருக்கிறார்கள்.


இவரது கணவர் ஜிதேஷ் படேலும் அஸ்மிதா குளோபல் பள்ளியில் இயக்குநராக இருக்கிறார். இவர்கள் பங்குச் சந்தை வர்த்தகம் தொடர்பான வகுப்புகளை நடத்துவதாக கூறி பணம் வசூலித்துள்ளனர்.  இந்தப் பணத்தையெல்லாம் தங்களுக்குச் சொந்தமான கிங் டிரேடர்ஸ், ஜெமினி என்டர்பிரைஸ், யுனைட்டெட் என்டர்பிரைஸ் ஆகிய நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் வசூலித்துள்ளனர்.


இதில் முறைகேடு நடப்பதாக செபிக்கு புகார்கள் போனது. இதையடுத்து அஸ்மிதா படேலுக்குச் சொந்தமான 6 நிறுவனங்களையும் தடை செய்துள்ளது செபி. மோசடியமாக வசூலிக்கப்பட்டதாக கூறப்படும் ரூ. 53 கோடியை திருப்பிச் செலுத்துமாறும் செபி உத்தரவிட்டுள்ளது. பங்கு மூலதனங்களை வசூலிக்க இந்த நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தற்போது விரிவான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. 



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுரை, கோவை மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி தருக.. பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

news

காஞ்சிபுரம் மக்களை தவெக தலைவர் விஜய் நாளை சந்திக்கிறார்: புஸ்ஸி ஆனந்த்!

news

திமுகவுடன் பேச 5 பேர் குழு.. விஜய்யுடன் பேச்சு கிசுகிசுப்புக்கு.. முற்றுப்புள்ளி வைத்தது காங்கிரஸ்

news

மரபுக்கவிதை புதுக்கவிதையிலும் சிறந்து விளங்கியவர்..தமிழன்பன் மறைவுக்கு முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல்

news

திமுக ஆட்சியில் பள்ளி முதல் பள்ளிவாசல் வரை பல்லிளிக்கும் பெண்களின் பாதுகாப்பு: நயினார் நாகேந்திரன்!

news

திமுக ஆட்சியில், திமுக-வினரிடம் இருந்தே பெண்களைக் காக்க வேண்டிய அவல நிலை: எடப்பாடி பழனிச்சாமி

news

தமிழகத்தில் நாளை 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிவு... துப்பாக்கி கலாச்சாரத்திற்கு இன்னும் ஒரு சான்று: அன்புமணி

news

ஜனநாயகன் விஜய்.. ஓவர் டூ மலேசியா.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. டிசம்பர் 27ல் சரவெடி!

அதிகம் பார்க்கும் செய்திகள்