டெல்லி: கரும்பு விவசாய சின்னத்தை வேறு கட்சிக்கு ஒதுக்கியதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி மனு தாக்கல் செய்திருந்தது. இதற்கு தேர்தல் ஆணையம் பதில் அளிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்பட உள்ளநிலையில், ஒவ்வொரு கட்சியினரும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் அவற்றை சரி செய்வதுடன் தொடர்ந்து தேர்தல் குறித்த பணிகளையும் செய்து வருகின்றனர் அரசியல் கட்சிகள்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்டிருந்த கரும்பு விவசாயி சின்னம் இந்த முறை ஒதுக்கப்படவில்லை. இதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஐகோர்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதற்கு யார் முதலில் கோரிக்கை வைக்கிறார்களோ அவர்களுக்கு தான் சின்னம் வழங்கப்படும் என்று கூறி சீமான் மனுவை தள்ளுபடி செய்தது.
தற்பொழுது அந்த சின்னம் கர்நாடகாவை சேர்ந்த பாரதிய ஐக்கிய மக்கள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இந்தக் கட்சி தமிழ்நாட்டில் திராவிட தெலுங்கு தேசம் என்ற கட்சியுடன் இணைந்து அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடப் போகிறதாம். எங்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டால் சீமானிடம் சின்னத்தை விட்டுத் தருவதாக அந்தக் கட்சி கூறியுள்ளது.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. சீமான் மனுவுக்குப் பதில் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பின்னர் வழக்கை வரும் 25ம் தேதிக்கு பின்னர் மீண்டும் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}