திருப்புவனத்தில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு... தடையை மீறி போராடுவேன்... சீமான்!

Jul 07, 2025,02:53 PM IST

சென்னை: இளைஞர் அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் திருப்புவனத்தில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்துவேன் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 


சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மடப்புரம் காளி கோவில் காவாளி அஜித்குமார், போராசிரியை நிகிதாவின் நகை காணாமல் போனதாக போலீசார் அடித்து சித்திரைவதை செய்து விசாரணை நடத்தியதில் அஜித்குமார் மரணம் அடைந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்பட்ட தனிப்படை போலீஸ்காரர்களான பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.




இந்த சம்பவத்தை கண்டித்து அதிமுக மற்றும் பாஜக சார்பில் திருப்புவனத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதனையடுத்து நாதக சார்பில் திருப்புவனத்தில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார். ஏற்கனவே நாம் தமிழர் கட்சி சார்பில் 3ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ள நிலையில் மீண்டும் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்டதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அனுமதி மறுக்கப்பட்டாலும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.


இது குறித்து நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவில் ஊழியர் அஜித்குமார் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து திருப்புவனத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முதலில் அனுமதி கேட்டோம் அனுமதி கொடுத்தனர். திடீர் என்று நள்ளிரவில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கின்றனர். காரணம் கேட்டால் கண்டதேவியில் தேரோட்டம் இருக்கிறது. அதற்கு இருக்கும் காவலர்களை நாங்கள் குவித்து விடுவோம் என்கின்றனர். நாங்கள் போராத்திற்கு அனுமதி மட்டும் தான் கேட்கின்றோம். பாதுகாப்பு கேட்கவில்லை. என் சொந்த நாட்டில் எங்களுக்கு எதற்கு பாதுகாப்பு. நாங்கள் தான் இந்த நாட்டிற்கு பாதுகாப்பு. அனுமதி இல்லை என்றாலும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்