நான் உயிருடன் இருக்கும் வரை நடக்க விடமாட்டேன்.. எண்ணூர் கருத்துக் கேட்பு கூட்டத்தில் சீமான் ஆவேசம்

Dec 20, 2024,06:40 PM IST

சென்னை: நான் உயிருடன் இருக்கும் வரை எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டத்தை நடக்க விடமாட்டேன் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஓருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.


எண்ணூர் அனல் மின் நிலைய கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி ஓருங்கிணைப்பாளர் சீமான் அங்கு அனல் பறக்கப் பேசினார். 


அவர் பேசுகையில், அனல், புனல், அணு மின்நிலையங்கள் எல்லாம் நாட்டின் வளர்ச்சி வேலை வாய்ப்பு என்று சொல்லித்தான் கொண்டுவரப்பட்டது. இந்த வார்த்தைகளை கேட்கும் போது இனிப்பாக தான் இருக்கும். மின்சாரம் இல்லாமல் எப்படி வாழ்வது நாடு எப்படி வளர்ச்சி பெறும் என்பது எல்லாம் சரிதான். மின்சார தேவையை நிறைவு செய்வதற்கு நிலக்கரி, அணு உலை, அனல் மின் நிலைய உற்பத்தி தான் இருக்கிறது  என்றால்  அது சரியானது அல்ல என்று விஞ்ஞானிகளை சொல்கிறார்கள் அணுகுண்டு மீது உட்காருவதும் அணுஉலகின் அருகே இருப்பது ஒன்றுதான் என்று அவர்கள் சொல்கிறார்கள். 




வளர்ச்சி என்ற வார்த்தைகளை சொல்லியே பல தொழில்கள் இப்படித்தான் கொண்டுவரப்பட்டது. எது வளர்ச்சி தாயை கொன்று விட்டு பிணத்தின் மீது விளக்கை வைத்து அழுவது தான் வளர்ச்சியா?. காற்றை விசமாக்கி விட்டு, உணவை நஞ்சாக்கி விட்டு, நீரை நஞ்சாக்கி விட்டு, நிலத்தை நஞ்சாக்கி விட்டால், இது எப்படி வளர்ச்சியாகும். வளர்ச்சி என்பது என்ன? மின்சார உற்பத்தி தேவையா? கடல் அலைகளில் மின்சாரம் தயாரிக்கிறார்கள் சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்க முடியாதா. காற்றாலை கடல் அலை சூரிய ஒளி ஆகியவை தீராத வளம் நிலக்கரி தீர்ந்துவிடும் வளம். எந்த கேடாவது இயற்கைக்கு இருக்கா.


100 பேரில் 90 பேர் புற்றுநோயால் மரணம் மூன்று குழந்தைகளுக்கு புற்றுநோய் வர காரணம் என்ன தாய்ப்பால் நஞ்சானதால் தான். அனல் மின் நிலையத்தை வேண்டுமென்று சொல்பவர்கள் உங்களின் வீட்டை அனல் மின் நிலையத்திடம் கட்டிக் கொள்ளுங்கள். எங்களுக்கு நீங்கள் வசிக்கும் இருப்பிடத்தை கொடுத்து விடுங்கள். பிறகு எவ்வளவு ஆண்டு வேண்டுமானாலும் அனல் மின் நிலை நீட்டித்துக் கொள்ளுங்கள்.


மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இண்டிகோ தவிர வேறு விமானங்கள் கிடையாது. அப்புறம் எதற்கு 5000 ஏக்கர் விலை நிலத்தை பறித்து விமான நிலையம் கட்ட வேண்டும். 5000 ஏக்கரில் ஏர்போர்ட் கட்ட கூடாது. ஏர் பூட்டி உழ வேண்டும். முதலில் பசியோடு இருப்பவனைப் பாருங்கள். வளர்ச்சி வளர்ச்சி என்று பசியில் கிடந்து செத்தால் கரண்டில் எரிக்கிறீர்கள். எந்த வளர்ச்சி உங்களுக்கு தேவை. 


கொரோனா சமயத்தில் 80 கோடி ஏழைகளுக்கு ரேஷன் பொருட்களை வழங்கியதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா கூறி இருந்தார் வளர்ச்சி என்று சொல்பவர்கள் இரவு உணவு இல்லாமல் படுக்கச் செல்ல மாட்டார்கள். பசி இல்லா பச்சிளம் குழந்தைகள் படுக்கச் சொல்வார்கள் என்று உறுதி தருவார்கள் என்றால் எத்தனை அணு உலைகளை வேண்டும் ஆனாலும் கட்டுங்கள். ஒரு பிரச்சனையும் இல்லை. 


மின்சார உற்பத்திக்காக அணு உலை கண்டுபிடிக்கப்பட்டதா? சூரிய ஒளி தகடுகள் விவசாய நிலங்கள் தான் போடுவார்களா? அரசு கட்டிடங்களின் மேற்கூறையில் போட முடியாதா? போர் நடந்து பேரழிவு நடந்த இடத்தில் கூட மக்களை மறுபடியும் குடி அமர்த்த முடியும். ஆனால் அணு உலை வெடித்த இடத்தில் மக்களை மீண்டும் குடியமர்த்த முடியாது. கேரளாவில் அணு உலை கொண்டு வர கம்யூனிஸ்டுகளும் காங்கிரஸ்களும் எதிர்த்தது. ஏனென்றால், வெளிச்சத்தில் வாழ்வதைவிட நான் உயிரோடு வாழ வேண்டும் என்று சொன்னார்கள். அப்படி என் மண்ணையும் மக்களையும் நேசிக்கும் தலைவர்கள் இருந்தார்கள் இறந்தார்கள். இப்போது அப்படிபட்ட தலைவர்கள் இல்லை என்றார்.


அவரது பேச்சின்போது திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். இதனால் கூட்டத்தில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. இருப்பினும் எந்தவிதமான அசம்பாவிதமும் நடைபெறவில்லை.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

North East Monsoon On the way: சென்னை உட்பட 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

news

அதிமுகவில் இருந்து மேலும் 15 பேர் தவெகவுக்கு வருகிறார்கள்: அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!

news

Thentamil தலையங்கம்: எங்க வழி தனி வழி.. அரசியல் கணக்குகளும்.. திமுகவின் புதிய பாதையும்

news

6 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது செல்லும்.. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

news

Good Evening Friends... சத்தான சுவையான ராகி அடை செஞ்சு சாப்பிடலாமா?

news

கத்திரிக்காய் நீல கத்திரிக்காய்.. அதிலிருந்து.. சுட்ட கத்தரிக்காய் கொத்சு!

news

நவராத்திரி.. சோழர் காலத்தில் அரசு விழா.. நாயக்கர்கள் காலத்தில் 9 நாள் திருவிழா!

news

சமையல் With ஸ்வர்ணா.. முருங்கைக்கீரை தக்காளி ரசம் .. சூப்பாகவும் குடிக்கலாம்

news

திடீர் உடல்நலக்குறைவு: இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச மருத்துவமனையில் அனுமதி!

அதிகம் பார்க்கும் செய்திகள்