சிவகங்கை: சுய தொழிலை ஊக்குவிக்கும் பொருட்டு, தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் பள்ளி மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தின் சார்பில் பயிற்சிகள் வழங்கப்பட்டது.
எதிர்காலத்தில் மாணவர்களுக்கு எப்படி கல்வி அவசியமானதோ அதே போன்று கைவசம் சுயதொழில் என்பது முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இதனால் மாணவர்களுக்கும் அவர்களுடைய பெற்றோர்களுக்கும் சுய தொழிலை ஊக்குவிக்கும் பொருட்டு தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் பள்ளியில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தின் சார்பில் பினாயில், சோப் பவுடர், சோப் ஆயில் தயாரித்தல் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.

இதில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தின் இயக்குனர் சண்முகம் மற்றும் பயிற்சியாளர் ஆரோக்கிய சகாய அருள் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களை ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பினாயில் சோப் பவுடர் சோப் ஆயில் தயாரித்தல் பயிற்சி வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பெற்றோர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். பின்னர் இந்த நிகழ்வு குறித்து பேசும் போது, பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள பயிற்சி மையத்தில் லைசால், பன்னீர், ஓமவாட்டர் முதலான பல்வேறு வாசனை பொருட்கள் உட்பட அனைத்தும் குறைந்த செலவில் தயாரிக்கும் பயிற்சி வழங்கி வருகின்றோம்.

கம்ப்யூட்டரில் உள்ள பைத்தான், ஜாவா மற்றும் தையல் பயிற்சிகள், ஆரி ஒர்க், ஸ்வீட் தயார் செய்தல், மில்லட் தயார் செய்தல், மேட் தயார் செய்தல், தரைவிரிப்புகள் தயார் செய்தல், கூடை தயார்செய்தல் ஆகியவற்றிக்கான பயிற்சி போன்றவையும் எங்களது பயிற்சி மையத்தில் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது. தேவைப்படுவோர் எங்களுடைய பயிற்சி மையத்திற்கு வந்து பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். அனைத்தும் இலவசம்.
பினாயில் 20 லிட்டர் தயாரிக்க மொத்த செலவு 225 ரூபாய்க்குள்தான் வரும். 40 ரூபாய் என்று தோராயமாக விற்றால் 800 ரூபாய் கிடைக்கும்.சோப் ஆயில் 10 லிட்டர் தயார் செய்ய 250 ரூபாய் ஆகும். 80 ரூபாய் லிட்டர் என்று விற்றால் 800 ரூபாய்க்கு விற்கலாம்.சோப் பவுடர் தயாரிக்க ஆகும் செலவு 5 கிலோவிற்கு 580 ரூபாய் ஆகும்.கிலோ 325 ரூபாய் என்று தோராயமாக விற்றால் 470 ரூபாய் லாபம் கிடைக்கும். நாம் இவ்வாறு தயாரிக்கும் பொருள்கள் அனைத்துமே கலப்பிடமில்லாதது , சுத்தமானது என விளக்கம் அளித்தார் .

பள்ளி அளவில் இங்குதான் முதன் முதலாக இந்த பயிற்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. குறைந்த செலவில் நேரடியாக வழங்கப்பட்ட பயிற்சியானது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இளம் வயதிலேயே தொழில் முனைவோர்களை உருவாக்குவதற்கு இது போன்ற பயிற்சிகள் நல்ல உதவியாக இருக்கும். நம் வீட்டிற்கு தேவையானவற்றை தயாரித்துக் கொள்ளவும், குடிசைத்தொழில் போன்று செய்வதற்கும் இவர்களது பயிற்சி மிகவும் உதவிகரமாக இருந்தது எனவும் பெற்றோர்கள் தெரிவித்தனர். மேலும் பெற்றோர்களுக்கும் மாணவர்களும் ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்
தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!
அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்
மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
{{comments.comment}}