சென்னை: தமிழ்நாட்டில் கரூர் மாவட்டத்தில் கிழக்கு எது, மேற்கு எது என்று தெரியாத ஹேமா மாலினியும், அனுராக் தாக்கூரும் திமுக மீது குற்றம் சாட்டுகின்றனர். பாஜக பிணத்தின் மீது அரசியல் செய்யும் கட்சிகளை பொதுமக்கள் உமிழ்கின்றனர் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் இன்று கையெழுத்து இயக்கம் நடந்தது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து செல்வப்பெருந்தகை பேசுகையில், வாக்கு திருட்டைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது கையெழுத்து இயக்கம் நடந்து வருகிறது. 6 கோடி கையெழுத்துகளைப் பெற திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் ஒரு கோடி கையெழுத்துகளைப் பெற்று ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும்.

கரூர் துயர சம்பவத்தின் ஈரம் கூட இன்னும் காயவில்லை. ஆனால் , சில அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் பிணங்களின் மீது அரசியல் செய்து வருவது வேதனை அளிக்கிறது. பிணத்தை வைத்து சில கட்சி தலைவர்கள் அரசியல் செய்வது அரசியல் பிழை. டெல்லியில் இருந்து இரவோடு இரவாக விமானத்தை பிடித்து கரூர் வந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்தும், உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலியும் செலுத்திவிட்டு சென்றுள்ளனர்.
கரூரில் கிழக்கு எது, மேற்கு எது என்று தெரியாத ஹேமமாலினி, அனுராக் தாக்கூர் ஆகியோர் தி.மு.க மீது குற்றம் சாட்டுகின்றனர். ஹேமமாலினி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு அரசியல் செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள குழு. அவர்கள் வந்தவுடன் அரசியல் செய்ய ஆரம்பித்துவிட்டனர். ஹேமமாலினி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள உண்மை கண்டறியும் குழு ஏன் கும்பமேளாவில் நடந்த விபத்தின் போது அமைக்கப்படவில்லை. மணிப்பூரில் எத்தனை படுகொலைகள் மற்றும் வன்கொடுமைகள் நடந்தன. அங்கு இந்த உண்மையை கண்டறியும் குழுவை அனுப்பியிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
பொங்கலுக்கு ஜனநாயகன் திரைப்படம் வராது... சென்சார் வழக்கு ஜனவரி 21க்கு ஒத்திவைப்பு
முதல்வர் ஸ்டாலினைப் பாராட்டிய டாக்டர் ராமதாஸ்... திமுக பக்கம் டேக் டைவர்ஷன் எடுக்கத் திட்டமா?
தவெக தேர்தல் அறிக்கை தயாரிக்க 12 பேர் கொண்ட குழு...பட்டியலை வெளியிட்ட விஜய்
தேசியக் கட்சிகள் இல்லாமல் திராவிடக் கட்சிகளால் ஜெயிக்க முடியாதா??
பிறப்பு முதல் இறப்பு வரையிலான 50 வகையான அரசு சேவைகள்... இனி வீட்டிலிருந்தே பெறலாம்
நெருக்கடியை சந்திக்கும் பெரிய ஹீரோக்களின் படங்கள்...கனத்த மெளனம் காக்கும் திரையுலகம்
நாம் சுவைக்க மறந்த வேர்க்கடலை சட்னி.. அதுக்குப் பின்னாடி இருந்த பாலிட்டிக்ஸ் தெரியுமா?
ஆஸ்கார் ரேசில் 'டூரிஸ்ட் ஃபேமிலி'...மேலும் 5 இந்திய படங்களும் இருக்கு
சின்னச் சின்னதா மாறுங்க.. ஹெல்த்தி ஆய்ருவீங்க.. Stay Healthy With Small Changes!
{{comments.comment}}