டெல்லி: 100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்ற மசோதவை கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் டிசம்பர் 18ம் தேதி சென்னையில் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது குறித்து டெல்லியில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை கொரோனா காலத்தில் அமல்படுத்தவில்லை என்றால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்திருப்பார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை மறுநாள் டிசம்பர் 18ம் தேதி சென்னையில் மக்கள் பெருந்திரள் போராட்டம் நடைபெறும்.

பாஜக அரசு தொடர்ச்சியாக அரசியல் அமைப்பை சிதைத்து வருகிறது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை சீர் குலைப்பதற்கு 11 ஆண்டுகளாக முயற்சி செய்கிறார்கள். அதன்படி, பெயரை மாற்றுவதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டுவர உள்ளார்கள். ஆனால் இந்த திட்டம் மகாத்மா காந்தி பெயரிலேயே இருக்க வேண்டும். மகாத்மா காந்தி பெயரில் மீண்டும் இந்த திட்டத்தை நடைமுறையில் கொண்டு வர வேண்டும். இந்த திட்டத்தை சிதைக்க நினைக்கும் பாஜக அரசு 125 நாள் என்று கூறி அதற்கான தொகையை மாநிலம் 40%, யூனியன் பிரதேசம் 10% வழங்க வேண்டும் என கூறி மாநிலங்கள் மீது நிதிச்சுமையை திணிக்கிறது.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், கல்வி நிதி, பேரிடர் பெருவெள்ளம் உள்ளிட்டவற்றுக்கான நிதியை மத்திய அரசு கொடுக்காமல், மாநிலத்தின் மீது நிதி சுமையை ஏற்படுத்துகிறது. மத்திய அரசுக்கு தமிழ்நாட்டை பிடிக்கவில்லையா, தமிழக மக்களை பிடிக்கவில்லையா, தமிழ் மொழியை பிடிக்க வில்லையா. தமிழ்நாட்டின் மீது ஒரு வரலாற்றுப் போரை மத்திய அரசு தொடர்ந்து நிகழ்த்தி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம்... டிசம்பர் 18ம் தேதி காங்கிரஸ் போராட்டம்: செல்வப்பெருந்தகை
எஸ்ஐஆர் பணிகள் மூலம் தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு
Political Maturity on cards?.. கே.ஏ.செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் பயணிக்குமா தவெக?
ஈரோடு விஜய் பிரச்சாரம்.. ஏகப்பட்ட நிபந்தனைகள்.. கடைப்பிடிப்போம் என பத்திரம் கொடுத்த தவெக!
மார்கழி மாதம் .. அணிவகுத்து நிற்கும் முக்கிய வழிபாடுகள்!
வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோவிலில்.. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை வழிபாடு
மாசமோ மார்கழி மாசம்.. வாசலில் கலர் கலர் கோலம்.. தினம் ஒரு கோலம்!
தொந்தி மாமா வந்தாராம்.. தொப்பியை தலையில் போட்டாராம்!
மாதங்களில் மார்கழி.. Ode to the Auspicious Marghazi Month!
{{comments.comment}}