விஜய்யை ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பதைத் தவிர வேறு வழியில்லை.. அபிஷேக் மனு சிங்வி

May 07, 2026,05:42 PM IST

டெல்லி: தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும். அதுதான் சட்டம். அதை அவர் இன்னும் செய்யாமல் இருப்பது வருத்தத்திற்குரியது. விஜய்யை ஆட்சியமைக்க அழைப்பு விடுப்பதைத் தவிர ஆளுநருக்கு வேறு வழியில்லை என்று காங்கிரஸ் எம்.பியும், மூத்த வழக்கறிஞருமான அபிஷேக் சிங் மனுவி கூறியுள்ளார்.


இதுதொடர்பாக அவர் கூறுகையில், மிகவும் வருத்தத்துடன் ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன்; அரசியலமைப்பு அறிவின் களஞ்சியமாக இருக்க வேண்டிய ஆளுநருக்கு, தமிழ்நாட்டில் தனிப்பெரும் கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பதைத் தவிர வேறு வழியில்லை. இதில் சந்தேகத்திற்கே இடமில்லை. 


சொல்லப்போனால் சட்டம், முன்னுதாரணங்கள், பாரம்பரியம், அரசியலமைப்பு கலாச்சாரம் மற்றும் அதன் பண்பு என அனைத்திலும் இதுவே முறை. கடந்த காலத்தில் இது எண்ணற்ற முறை நடந்துள்ளது.




மேலும், வேறு எந்தக் கூட்டணியும் ஆட்சி அமைக்க உரிமை கூட கோரவில்லை. பற்றாக்குறை என்பது வெறும் 7-8 இடங்கள் மட்டுமே, அதோடு 10-12 நாட்களில் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் எப்போதும் நிபந்தனை விதிக்கப்போகிறார். 


பிறகு இதில் என்ன பிரச்சனை? அரசியலமைப்பு நெறிமுறைகள் மற்றும் முன்னுதாரணங்களை இவ்வாறு சிதைப்பது அல்லது நீர்த்துப்போகச் செய்வது மிகவும் கண்டிக்கத்தக்கது, இதை நான் மிகுந்த வருத்தத்துடன் கூறுகிறேன். இது எப்போதோ செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றார் அவர்.


ஆட்சியமைக்க உரிமை கோரி தவெக தலைவர் விஜய், ஆளுநரை நேற்று சந்தித்து முறைப்படி கோரிக்கை வைத்தார். ஆனால் இதுவரை அவருக்கு ஆளுநரிடமிருந்து அழைப்பு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தலையங்கம்: நாட்டின் பாதுகாப்பில் பெண்மையின் பேராற்றல்.. CRPF Women Battalion turns 40!

news

ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு: அடுத்தடுத்து சிக்கும் நபர்கள்... தீவிரமடையும் விசாரணை

news

பிரே பண்ணிட்டு சாப்பிடுவோமா?.. நீட்டிக்கப்பட்ட காலை உணவுத் திட்டம்.. தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்

news

திமுக.,வுக்கும் ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கும் தொடர்பு இல்லை: முன்னாள் அமைச்சர் ரகுபதி

news

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் "கை சுத்தமில்லை"...கோர்ட்டில் மு.க.ஸ்டாலின் பதில் மனு தாக்கல்

news

ஆசிய விளையாட்டு போட்டி 2026: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை

news

Short story by Joseph Samraj: செதுக்குமுத்து!

news

ஜப்பானுக்கு எதிரான டி20 போட்டி: 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி

news

சொத்துக்குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் மனு தள்ளுபடி

அதிகம் பார்க்கும் செய்திகள்