நீதி கேட்பதை தடுக்கும்.. திமுக அரசிற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.. டாக்டர் தமிழிசை

Jan 03, 2025,03:28 PM IST

சென்னை: நீதி கேட்டு போராடிய கண்ணகியின் மண்ணில்.. பெண்கள் நீதி கேட்பதற்கு தடை விதிக்கும் திமுக அரசிற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த அளவிற்கு பெண்களிடம் பாராபட்சமாக நடந்து கொள்ளக் கூடாது என்று பாஜக மூத்த தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.


அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டும், குற்றவாளிக்க தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்று பாஜக மகளிர் அணி சார்பில் இன்று பேரணி நடந்தது. இந்தப் பேரணியை நடிகை குஷ்பு தொடங்கி வைத்தார். 


இந்த பேரணி திண்டுக்கல், திருச்சி விருதாச்சலம், விழுப்புரம் வழியாக சென்னை வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த பேரணிக்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை என்று கண்டனம் தெரிவித்த பாஜகவினர். திட்டமிட்ட படி பேரணியை தொடங்கிய சிறிது நேரத்திலேயே  குஷ்பு உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பெண்கள் கைது செய்யப்பட்டனர்.




இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், மதுரையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு குரல் எழுப்பிய சகோதரி குஷ்பூ சுந்தர் தலைமையில் போராட்டத்தில் கலந்து கொண்ட பாஜக  மகளிர் அணி தலைவி உமாரதி செயலாளர் பிரமிளா சம்பத் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரஸ்வதி மாநில செயலாளர் ஆனந்த பிரியா மற்றும் மகளிர் அணி நிர்வாகிகளை கைது செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.... 


அதே மதுரையில் டங்ஸ்டன் தொழிற்சாலைக்கு இப்போது அனுமதி மறுபரிசீலனை செய்யப்படுகிறது என்று மத்திய அரசு தெரிவித்த பின்பும் வேண்டுமென்றே போராடும் வைகோவிற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. நீதி கேட்டு போராடிய கண்ணகியின் மண்ணில்.. பெண்கள் நீதி கேட்பதற்கு தடை விதிக்கும். திமுக அரசிற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த அளவிற்கு பெண்களிடம் பாராபட்சமாக நடந்து கொள்ளக் கூடாது என்பதை வலிமையாகவே பதிவு செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்