சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ.,வும் ஆன ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று (டிசம்பர் 14) சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.
ஈரோடு வெங்கட கிருஷ்ணசாமி சம்பத் இளங்கோவன் என்ற இயற்பெயர் கொண்டவர். தமிழக அரசியலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் என அனைவராலும் அறியப்படுகிறார். லோக்சபா எம்பி., மத்திய அமைச்சர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்த இவர் ஈவேரா பெரியாரின் மூத்த சகோதரர் கிருஷ்ணசாமியின் பேரன் ஆவார்.
2004ம் ஆண்டு முதல் முறையாக கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி எம்.பி., ஆன இவர், 2019ம் ஆண்டு சத்தியமங்கலம் தொகுதி எம்எல்ஏ.,வாகவும் இருந்துள்ளார். 2014ம் ஆண்டு முதல் 17 ம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியில் தமிழக தலைவராகவும் இருந்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரசின் கோட்டையாக மாற்றி வைத்திருந்த இளங்கோவன், 2021ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் தனது ஈரோடு கிழக்கு தொகுதியில் தன்னுடைய மகன் திருமகன் ஈரேவா.,வை போட்டியிட வைத்தார். ஆனால் உடல்நலக்குறைவால் அவர் திடீரென உயிரிழந்ததால் அந்த தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் தானே போட்டியிட்டு, வெற்றியும் பெற்றார்.
2019 லோக்சபா தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்டு கடுமையாக போராடி தோல்வியைத் தழுவினார். அந்தத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி தேனி தொகுதியைத் தவிர அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது. ஈவிகேஎஸ் இளங்கோவனின் தோல்வி மாற்றுக் கட்சியினரையும் கூட வருத்தமடைய வைத்தது.
தேர்தல் களத்தில் பல தோல்விகளையும், சில வெற்றிகளையும் பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ.,வாக இருந்து வந்தார். 75 வயதாகும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஏற்கனவே இதயத்தில் பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீத்தில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.
நவம்பர் 28ம் தேதி அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால், அவர் உடனடியாக ஐசியு.,விற்கு மாற்றப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. வென்டிலேட்டர் மூலம் அவருக்கு சுவாசம் தரப்படுவதாக சொல்லப்பட்டது.
ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நுரையீரல் சார்ந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, அதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை 10.28 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவிற்கு தமிழக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, சிவாஜி கணேசன் என காங்கிரஸ் மூத்த தலைவர்கள், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட மாற்றுக் கட்சித் தலைவர்கள் என அனைவராலும் விரும்பப்பட்டவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், கொள்கையில் உறுதியாக இருப்பவர். நயமாக பேசக் கூடியவர். எதிரணியினரையும் கவரக் கூடிய வகையில் திறம்படப் பேசக் கூடியவர்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் வந்த வண்ணம் உள்ளனர். போலீசார் மருத்துவமனையில் குவிக்கப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கரூர் வழக்கு.. 2வது சிபிஐ விசாரணை முடிவுக்கு வந்தது.. புன்னகையுடன் வெளியேறிச் சென்ற விஜய்!
2026ம் ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டம்.. நாளை கூடுகிறது.. ஆளுநர் உரையாற்றுவாரா?
அடுத்த திட்டம் என்ன?...ஆதரவாளர்களுடன் சசிகலா தீவிர ஆலோசனை
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன30ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு.. இதுவரை 12.80 லட்சம் பேர் மனு
மீண்டும் மீண்டும் தள்ளிப் போகும் தெறி ரீ ரிலீஸ்...காரணம் இது தானா?
71 மாவட்டங்களுக்கும் தலைவர்கள்.. ஒரு வழியாக அறிவித்தது காங்கிரஸ்!
தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் வெள்ளி விலை... இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.1,360 உயர்வு
அமைதி .. சத்தம் இல்லாமல் வந்தபோது...!
சிவபெருமானின் முழு அருளை பெற இந்நன்நாளை தவற விடாதீர்கள்
{{comments.comment}}