சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்குத் தொடர்ந்ததே இப்போதைய முதல்வர்தான். எதிர்க்கட்சி வரிசையில் அவர் இருந்தபோது செந்தில் பாலாஜி துரோகி, ஆனால் இப்போது திமுகவுக்கு வந்தவுடன் தியாகியாகி விட்டாரா என்று முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கேட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் அளித்துள்ளது. இதையடுத்து அவர் இன்று மாலை அல்லது நாளை காலை விடுதலையாகி வெளியே வரவுள்ளார். இதை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் இந்த கொண்டாட்டங்களை டாக்டர் தமிழிசை விமர்சித்து ஒரு பதிவை தனது எக்ஸ் தளத்தில் போட்டுள்ளார். அவர் போட்டுள்ள பாயின்ட் பை பாயின்ட் கருத்து:
1. செந்தில் பாலாஜி மீது வழக்கு போட்டது தற்போதைய முதல்வர்.... எதிர்க்கட்சியில் இருக்கும் பொழுது துரோகி தன் கட்சிக்கு வந்தவுடன் தியாகியா ?....
2. சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டா சிறை சென்றார்.... தியாகி என்று கூறுவதற்கு?....
3.INDI... கூட்டணி இந்த ஜாமீனை கொண்டாடுகிறது இது ஜாமீன் தானே தவிர விடுதலை அல்ல .....
4. காவல் நிலையம் சென்று கையெழுத்திட வேண்டுமென்று வழக்காடு மன்றம் சொன்னவரை மந்திரி ஆக்கி கையெழுத்து இட வைக்கலாமா? என சிந்திக்கிறது திமுக
5. முறைகேடு செய்வதில் உறுதியாக இருந்தவரை சிறையில் உறுதியாக இருந்தார் என்று பாராட்டுகிறார் முதல்வர்....
6. 471 நாட்கள் சிறையில் வைத்திருந்தது பலமுறை வழக்காடு மன்றத்தினால் ஜாமீன் மறுக்கப்பட்டதனால். மத்திய அரசினால் அல்ல
7. எமர்ஜென்சி காலத்தில் கூட இந்த அடக்குமுறை இல்லை என முதல்வர் சொல்கிறார், எமர்ஜென்சி அடக்குமுறை கொண்டு வந்தவரோடு கூட்டணியில் இருந்து கொண்டு
ஆக ஒட்டுமொத்தமாக முறைகேடு வழக்கில் கைதான வரை உறுதியானவர் என்றும் பாராட்டுவது வேடிக்கை என்று கூறியுள்ளார் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்.
டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் சொல்லும் இந்த அரசியல் முரண்பாடு தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களிலும் காணப்படுகிறது. முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்த தலைவர்கள் பலர் ஊழல் வழக்குகளில் சிக்கி, வழக்கு தொடரப்பட்டு பின்னர் பாஜகவில் இணைந்து நல்ல நல்ல பதவிகளில் இருக்கின்றனர். அதேபோல பாஜகவில் இருந்து காங்கிரஸுக்குத் தாவிய தலைவர்களும் பலர் தேசிய அளவில் உள்ளனர். இந்த முரண்பாட்டு அரசியல் தமிழ்நாடு மட்டுமல்லாமல் தேசிய அளவில் பரந்துபட்டு இருக்கிறது!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}