பெங்களூரு: உதவி கேட்டு வந்த பல பெண்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தி சீரழித்து விட்டார் என்று முன்னாள் பிரதமர் தேவே கெளடாவின் பேரனும், முன்னாள் கர்நாடக அமைச்சர் ரேவண்ணாவின் மகனும், ஹசன் தொகுதி எம்.பியுமான பிரஜ்வால் ரேவண்ணா மீது பரபரப்பு புகார் கிளம்பியுள்ளது. இதுகுறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் சித்தராமையா கூறுகையில், பிரஜ்வால் ரேவண்ணா மீது எழுந்துள்ள புகார்கள் குறித்த விசாரிக்க சிறப்பு புலனாய்வுநக் குழுவை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. ஹசன் மாவட்டத்தில் பிரஜ்வால் ரேவண்ணா குறித்த ஆபாச வீடியோக்கள் வலம் வருகின்றன. பெண்கள் பாலியல் ரீதியாக தவறாக பயன்படுத்தப்பட்டிருப்பதை இது உறுதி செய்கிறது என்று முதல்வர் கூறியுள்ளார்.
கர்நாடக மகளிர் ஆணையத்துக்கு வந்த புகார்களைத் தொடர்ந்து, விசாரணை நடத்துமாறு அரசுக்கு மகளிர் ஆணையம் கோரிக்கை வைத்தது. அதன் பேரில் தற்போது இந்த சிறப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
நாட்டை விட்டு வெளியேறிய பிரஜ்வால்

இதற்கிடையே, தன் மீது எழுந்த புகார்கள் மற்றும் விசாரணையைத் தொடர்ந்து பிரஜ்வால் ரேவண்ணா நாட்டை விட்டு வெளியேறி விட்டதாக காவல்துறையை மேற்கோள் காட்டி டெக்கான் ஹெரால்ட் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக பிரஜ்வால் ரேவண்ணா தன்னிடம் உதவி கேட்டு வந்த பெண்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தி, அவர்களுடன் வீடியோ காலில் பேசி ஆபாச வீடியோக்களைப் பதிவு செய்து அவர்களை மிரட்டியதாக சர்ச்சை வெடித்தது. இதுதொடர்பாக பல்வேறு வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வலம் வரத் தொடங்கின. இதனால் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பல பெண்கள் புகார்களும் கொடுத்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த பரபரப்பால் தற்போது தேவெ கெளடா குடும்பம் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.
தேவெ கெளடாவின் மூத்த மகனான ரேவண்ணாவின் மகன்தான் பிரஜ்வால். ஹசன் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக அவர் இருந்து வருகிறார். தற்போது நடந்துள்ள தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஹசன் தொகுதியில் மீண்டும் பிரஜ்வாலே போட்டியடுகிறார்.
சாதாரணமான புகார் அல்ல

பிரஜ்வால் மீதான புகார்கள் குறித்து கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறுகையில், இது சாதாரணமான புகார் அல்ல. மிக மிக சீரியஸானது. பிரதமர் பதிலளிக்க வேண்டும். விஜயேந்திரா எதியூரப்பா பதிலளிக்க வேண்டும். ஷோபா, குமாரசாமி ஆகியோர் பதிலளிக்க வேண்டும். மக்களுக்கு விளக்கம் தர வேண்டும். அவர்களது இமேஜை கெடுக்க மகளிர் ஆணையம் முயல்வதாக அவர்கள் கூறியதாக கேள்விப்பட்டேன். வீடியோக்களைப் பாருங்கள். பார்த்து விட்டு விளக்கம் கொடுங்கள். ஊடகங்களும் இதுகுறித்து நிறைய செய்தி வெளியிட்டுள்ளன. மக்களும் இதைப் பார்த்துள்ளனர். எனவே விளக்கம் தர வேண்டியது அவர்களது கடமையாகும் என்றார்.
சர்ச்சைக்குரிய பிரஜ்வால் ரேவண்ணா போட்டியிட்டுள்ள ஹசன் தொகுதியில் 26ம் தேதிதான் வாக்குப்பதிவு நடந்தது என்பது நினைவிருக்கலாம்.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}