ஹம்பர்க்: ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நடந்த பயங்கர துப்பாக்கிச் சூட்டில் பலர் கொல்லப்பட்டனர். துப்பாக்கியால் சுட்ட மர்ம நபரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஹம்பர்க் நகரில் உள்ள ஜெஹோவா விட்னஸ் மையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை இரவு 8.15 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. வடக்கு ஹம்பர்க் நகரில் உள்ள இந்த மையத்தில் பெரும் திரளானோர் கூடியிருந்த நிலையில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூட்டில் இறங்கினார். இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்தனர். அதற்குள் அந்த இடமே போர்க்களமாகியிருந்தது.
யார் அந்த நபர், எதற்காக சுட்டார் என்று தெரியவில்லை. அந்தப் பகுதி முழுவதும் தற்போது போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் 6 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதாக சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் தெரிவித்துள்ளனர். ஆனால் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை தெரியவில்லை.. பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
ஜெஹோவா மதப் பிரிவு நம்பிக்கையாளர்கள் இணைந்து இந்த மையத்தில் ஒரு கூட்டம் நடத்திக் கொண்டிருந்தபோதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஜெர்மனியில் ஜெஹோவா பிரிவைச் சேர்ந்தவர்கள் 1 லட்சத்து 75 ஆயிரம் பேர் உள்ளனர். ஹம்பர்க்கில் 3800 பேர் உள்ளனர். 19வது நூற்றாண்டில் உருவான மதப் பிரிவு இது. அகிம்சையை வலியுறுத்தி இவர்கள் போதனையில் ஈடுபடுவர். வீடு வீடாக சென்று மதப் பிரச்சாரம் செய்வது இவரது வழக்கம்.
ஜெர்மனியில் சமீப ஆண்டுகளாக பல்வேறு தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இதில் சில தீவிரவாத சம்பவங்கள் ஆகும். 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெர்லின் நகரில் கிறிஸ்துமஸையொட்டி நடந்த சந்தையின்போது தீவிரவாதிகள் லாரியை விட்டு சரமாரியாக ஏற்றிய சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர். அந்த செயலில் ஈடுபட்ட நபர் துனிஷியாவைச் சேர்ந்தவர் என்றும், ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர் என்றும் பின்னர் தெரியவந்தது.
இதேபோல வலதுசாரி தீவிரவாத செயல்களும் அதிகரித்துள்ளன. 2020ம் ஆண்டு வலது சாரி தீவிரவாதி ஒருவர் ஹனாவ் நகரில் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 10 பேர் கொல்லப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!
மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்
தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?
எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!
முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!
உழவனின் உயிர் நண்பன்!
தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!
{{comments.comment}}